12
February, 2026

A News 365Times Venture

12
Thursday
February, 2026

A News 365Times Venture

"எப்ஸ்டீனை சந்தித்து இருக்கிறேன் தான்; ஆனால், 'இதற்கு'!" – ராகுல் காந்திக்கு ஹர்தீப் பூரி பதில்!

Date:

உலகம் முழுவதும் பரபரப்பைக் கிளப்பி வரும் எப்ஸ்டீன் ஃபைலுக்கு இந்தியாவும் விதிவிலக்கு அல்ல.

அமெரிக்கா வெளியிட்டு வரும் எப்ஸ்டீன் ஆவணங்களில் இந்தியாவைச் சேர்ந்த சிலரின் பெயரும் இடம்பெற்றிருக்கிறது.

தற்போது இந்திய நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் பல்வேறு விஷயங்களைக் குறிப்பிட்டு மத்திய அரசைக் கடுமையாகச் சாடி வரும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர் ஹர்தீப் பூரிக்கு எப்ஸ்டீனுடன் தொடர்பு உள்ளது என்று குற்றம் சாட்டினார்.

ஹர்தீப் பூரி இந்திய வெளியுறவுத் துறையின் முன்னாள் உயர் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெஃப்ரி எப்ஸ்டீன்

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டிற்கு பதிலளித்துள்ளார் ஹர்தீப் பூரி…

“எப்ஸ்டீனில் முப்பது லட்சம் இமெயில்களில் என்னுடைய பெயர் வெறும் மூன்று நான்கு முறை தான் இடம்பெற்றிருக்கிறது.

அலுவல் ரீதியாக எப்ஸ்டீனை சில நிகழ்வுகளில் சந்தித்துள்ளேன். அதைத் தவிர, அவர் செய்துகொண்டிருந்த வேலைக்கும் எனக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை.

எனக்கு எப்ஸ்டீனின் செயல்பாடுகளில் விருப்பமே இல்லை. அவர்களைப் பொறுத்த வரை, நான் சரியான ஆள் இல்லை. எப்ஸ்டீன் என்னை இரண்டு முகம் கொண்டவர் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ராகுல் காந்தி அந்த இமெயில்களைப் படிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

நாடாளுமன்றம்: `இடைநீக்கங்கள், பதில் இல்லா கேள்விகள்' – முடங்குகிறதா ஜனநாயகத்தின் இதயம்?

நாடாளுமன்றம்இந்தியா, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு மட்டுமல்ல, உலகிலேயே மிக நீண்ட...

பாஜக வானதி சீனிவாசன் vs அதிமுக சந்திரசேகர்; கோவை வடக்கு தொகுதி யாருக்கு? தகிக்கும் தேர்தல் களம்!

சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே கோவை வடக்கு தொகுதியில் உச்சகட்ட பரபரப்பு...

தவெக: சேலம் விஜய் சந்திப்பு; 51 நிபந்தனைகள்; 5,000 பேருக்கு அனுமதி; செங்கோட்டையன் சொல்வது என்ன?

சேலத்தில் தவெக தலைவர் விஜய் பிரசாரக் கூட்டத்திற்குக் கடந்த டிசம்பர் மாதம்...