21
June, 2026

A News 365Times Venture

21
Sunday
June, 2026

A News 365Times Venture

`என்னுடன் போட்டோ எடுக்க கெஞ்சினார்' – ட்ரம்பின் பேச்சால் கொதித்த மெலோனி காட்டமான பதிலடி!

Date:

சர்வதேச அரசியல் மேடையில் ஒரு புகைப்பட விவகாரம், அமெரிக்கா மற்றும் இத்தாலி ஆகிய இரு நட்பு நாடுகளுக்கு இடையே மிகப்பெரிய புயலைக் கிளப்பியுள்ளது.

பிரான்சில் நடந்த ஜி-7 உச்சிமாநாட்டின் போது, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி தன்னிடம் வந்து கெஞ்சி, புகைப்படம் எடுத்துக் கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறிய கருத்து, இப்போது உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ட்ரம்ப்பின் இந்த பகிரங்கமான பேச்சுக்கு இத்தாலி பிரதமர் மெலோனி மிகவும் ஆவேசமாக பதிலடி கொடுத்துள்ளார்.

ட்ரம்ப் – மெலோனி

சமீபத்தில் ‘La7’ தொலைக்காட்சிக்கு டொனால்ட் ட்ரம்ப் ஒரு பேட்டி அளித்திருந்தார். அதில் உக்ரைன் விவகாரம் குறித்துப் பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென இத்தாலி பிரதமர் மெலோனி பற்றிப் பேசத் தொடங்கினார்.

பிரான்சில் அவர்கள் இருவரும் சோபாவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த வீடியோக்கள் வெளியானதை சுட்டிக்காட்டிய டிரம்ப், மெலோனி தன்னிடம் எப்படியாவது ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மிகவும் கெஞ்சியதாகவும், தனக்கு அதில் பெரிய விருப்பம் இல்லை என்றாலும், அவர் மீது பரிதாபப்பட்டுத்தான் தான் அந்தப் புகைப்படத்திற்குச் சம்மதித்ததாகவும் அதிரடியாகக் கூறினார்.

ட்ரம்ப்பின் இந்த பேச்சுக்கு உடனடியாக வீடியோ மூலம் பதிலடி கொடுத்த பிரதமர் ஜார்ஜியா மெலோனி, டொனால்ட் ட்ரம்ப்பின் இந்த வாதம் முற்றிலும் பொய்யானது மற்றும் கற்பனையானது என்று மறுத்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தனது நட்பு நாட்டுத் தலைவர்களிடம் ஏன் இப்படி நடந்துகொள்கிறார் என்று எனக்குப் புரியவில்லை எனக் குறிப்பிட்ட அவர், அமெரிக்காவின் எதிரி நாட்டுத் தலைவர்களிடம் காட்டும் மென்மையான போக்கை, அவர் இத்தாலி போன்ற நீண்டகால நட்பு நாடுகளிடம் காட்டுவதில்லை என்பது வருத்தமளிப்பதாகக் கூறினார். மேலும், நானும் சரி, எனது நாடான இத்தாலியும் சரி, யாரிடமும் எப்போதும் கெஞ்ச மாட்டோம் என்று மிக ஆவேசமாகத் தனது கண்டனத்தைப் பதிவு செய்தார்.

இந்த விவகாரம் வெறும் வார்த்தைப் போராக மட்டும் நின்றுவிடாமல், இரு நாடுகளுக்கு இடையேயான ராஜாங்க உறவிலும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. ட்ரம்ப்பின் இந்த அவமதிப்பான பேச்சைக் கண்டிக்கும் விதமாக, இத்தாலிய வெளியுறவு அமைச்சர் அந்தோனியோ தஜானி, தான் மேற்கொள்ளவிருந்த அமெரிக்கப் பயணத்தை அதிரடியாக ரத்து செய்துள்ளார்.

மேலும், இத்தாலியின் ஒட்டுமொத்த அரசியல் தலைவர்களும் கட்சிப் பாகுபாடின்றி மெலோனிக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்து வரும் நிலையில், இந்த ‘புகைப்பட விவகாரம்’ இரு நாடுகளுக்கு இடையே பெரிய பிரச்னையாக வெடித்துள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"அதிகாரிகளை கைக்குள் வைத்துக்கொண்டு குடைச்சல் கொடுக்கிறார்கள்" – அமைச்சர் கீர்த்தனா |Live Updates

குடைச்சல் கொடுக்கிறார்கள்!ஆனால், தவெக கட்சியினரின் இதுபோன்ற செயல்பாடுகள், அரசுப் பள்ளிகளின் நிலையை...

திருவாரூர்: அரசுப்பள்ளி வளாகத்தில் பிறந்தநாள் கொண்டாடிய தவெக நிர்வாகி! – வீடியோ வெளியாகி சர்ச்சை

தவெக-வின் மாவட்ட துணை செயலாளராக இருப்பவர் அகிலன். இவர் திருவாரூர் மாவட்டம்...

TNPSC: `சூப்பர் சிங்கர், சரிகமப மூலம் என்ன மாற்றம் நடக்குது?' – குரூப் 1 நேர்காணலில் சுவாரஸ்யம்!

டி.என்.பி.எஸ்.சி நடத்திய குரூப் 1 தேர்வின் முடிவுகள் வெளியாகி இருக்கின்றன.இதன் மூலம்...