13
June, 2026

A News 365Times Venture

13
Saturday
June, 2026

A News 365Times Venture

`உங்களுக்கு மண்டையில் ஏதாவது இருக்கிறதா?'- கடுகடுக்கும் மேயர் பிரியா

Date:

கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டுச் சென்னையில் தி.மு.க. சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட மேயர் பிரியா, தவெக ஆட்சியையும் முதல்வர் விஜய்யையும் கடுமையாக விமர்சித்துப் பேசியிருக்கிறார்.

விஜய்

அவர் பேசுகையில், “ஆட்சிக்கு வந்து இத்தனை நாள்கள் ஆகியும், ‘நாங்கள் இந்தத் திட்டத்தைப் புதிதாகக் கொண்டு வந்தோம்’ என்று சொல்வதற்கு அவர்களிடம் ஒரு திட்டம்கூட இல்லை. வெறும் ‘ஸ்டிக்கர் ஆட்சியும், சோபா ஆட்சியும்தான்’ இன்றைக்குத் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது.

அதை ஒருநாளும் ஒப்புக்கொள்ளாமல், இன்றைக்கும் ‘திமுகதான் காரணம், திமுகதான் எங்களை அப்படிப் பண்ணுகிறது’ என்று குறை சொல்கிறார்கள். ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் பொதுக்கூட்டங்களில் எப்படியெல்லாம் பேசினீர்கள்?

இன்றைக்கு முதலமைச்சராக இருக்கும் அவரே மேடைகளில் பேசும் போதெல்லாம் ‘தீய சக்தி, அந்த சக்தி, இந்த சக்தி’ என்கிறார். வீட்டிலிருந்து ஸ்கிரிப்ட் படித்துவிட்டு வருகிறீர்கள். காரில் வரும்போதுகூட அதை ஒரு ஐந்து முறை படித்திருக்கலாம். மேடைக்கு வந்ததும் மறந்துவிடுகிறது.

ஒரு முதலமைச்சர், தான் வெற்றி பெற்ற தொகுதிக்கு நன்றி சொல்லப் போனால், வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி கூறிவிட்டு, அங்கு என்னென்ன திட்டங்களைச் செய்யப்போகிறோம் என்று எடுத்து வைக்க வேண்டும்.

அவர்தான் நல்ல தலைவராகவும் முதலமைச்சராகவும் இருக்க முடியும். ஆனால், நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் அவர்கள், கொளத்தூர் தொகுதியில் தேர்தல் முடிந்து, ரிசல்ட் வந்த மறுநாளே நன்றி சொல்லப் போனார்.

எந்தவொரு விமர்சனமும் வைக்காமல், பொதுமக்களைப் பார்த்து நன்றி மட்டுமே தெரிவித்துவிட்டு வந்தார்.

சேகர் பாபு - மேயர் பிரியா
சேகர் பாபு – மேயர் பிரியா

முதலமைச்சர் பேசும்போது, ‘விர்ச்சுவல் வாரியர்ஸ்தான் எங்களுக்கு எல்லாமே’ என்கிறார். அந்த விர்ச்சுவல் வாரியர்ஸைப் பார்த்து நான் கேட்கிறேன், உங்களுக்கு மண்டையில் ஏதாவது இருக்கிறதா? ஒரு கன்டென்ட் போடுகிறீர்கள்.

அதில் எது உண்மை, எது பொய், எதைப் போட வேண்டும், எதை விட வேண்டும் என்ற எந்தப் பகுத்தறிவும் கிடையாது. ‘நாங்கள் விர்ச்சுவல் வாரியர்ஸ், எதை வேண்டுமானாலும் போடுவோம்’ என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா?

நேற்று மதிப்புக்குரிய ஆதவ் அர்ஜுனா அவர்கள் பேசும்போது, ‘நாங்கள் அதைச் செய்துவிடுவோம், இதைச் செய்துவிடுவோம்’ என்கிறார்கள். நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்யுங்கள், திமுககாரனை உங்களால் என்னைக்குமே அசைக்க முடியாது. என்றைக்காக இருந்தாலும் தமிழ்நாட்டில் கருப்பு சிவப்பு கொடிதான் பறக்கும்,” எனப் பேசியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

Zero FIR: குற்றம் நடந்தது ஓர் இடத்தில் என்றாலும், வேறு இடத்தில் புகாரளிக்கலாம்; என்ன நடைமுறை இது?

சில நேரங்களில் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றால், 'இது எங்கள்...

கொல்லூரில் முதல்வர் விஜய்: "எந்த விசேஷ கோரிக்கையும் அம்மனிடம் வைக்கவில்லை" – கோயில் கமிட்டி தலைவர்

கர்நாடகா மாநிலம் கொல்லூரில் இருக்கும் மூகாம்பிகை அம்மன் கோயில் மிகவும் பிரபலம்...

ஓபன் 'பார்' ஆக மாறிய பஸ் ஸ்டாப்; செய்தி வெளியிட்ட விகடன் – எச்சரிக்கை விடுத்து ஆக்ஷன் எடுத்த போலீஸ்

மயிலாடுதுறை மாவட்டம் கூறைநாடு பகுதியில் கடைவீதியிலேயே பேருந்துநிறுத்திற்கு அருகிலேயே மதுபானக்கடை கடை...

"70 ஆண்டுகளில் ஒரு முறை கூட வைகை அணை தூர்வாரப்படவில்லை; 2 மாதங்களில் நடக்கும்" – நிர்மல் குமார்

மமதுரையில் இன்று வைகை நதியை நேரில் ஆய்வு செய்தார் அமைச்சர் நிர்மல்...