17
March, 2026

A News 365Times Venture

17
Tuesday
March, 2026

A News 365Times Venture

ஈரான் போரால் குறையும் இந்திய ரூபாயின் மதிப்பு; இரண்டு முக்கிய காரணங்கள் என்னென்ன?

Date:

ஏற்கெனவே சில மாதங்களாகச் சரிவைச் சந்தித்து வந்தது இந்திய ரூபாயின் மதிப்பு. இந்த நிலையில், ஈரான் போர் தொடங்கியதும் ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு ரூ.92-ஐ கடந்தது. அது விரைவில் ரூ.93-ஐ தொட்டுவிடுமோ என்கிற அச்சம் கூட நிலவி வருகிறது.

ஈரானிலிருந்து கிட்டத்தட்ட 2,800 கிலோ மீட்டர் தள்ளி இருக்கிறது இந்தியா. ஆனால், அங்கே நடக்கும் போரின் தாக்கம்தான் இந்திய ரூபாய் மதிப்பைத் தற்போது வீழ்ச்சியில் தள்ளி உள்ளது.

பொதுவாகப் பார்த்தால், இந்திய ரூபாய் வீழ்ச்சிக்குக் காரணங்கள்…

ஈரான் Vs அமெரிக்கா, இஸ்ரேல் போர்

> ஈரான் போர் தொடங்கியதும், எரிசக்திகளின் விலை கூடி வருகிறது… இன்னும் இதன் விலை கூடுமோ என்கிற அச்சம் வேறு இருந்து வருகிறது.

உலக வர்த்தகத்திற்குத் தேவை அமெரிக்க டாலர்கள். அதனால், உலக நாடுகளும், முதலீட்டாளர்களும் எரிசக்திகளை வாங்கவும், பாதுகாப்பான முதலீடாகவும் அமெரிக்க டாலர்கள் மீது கவனம் செலுத்தி வருகின்றன.

இதனால், அமெரிக்க டாலரின் மதிப்பு சற்று வலுவடைந்து வருகிறது.

அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவடையும்போது, இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைகிறது.

இதற்கு இந்திய ரூபாயின் மதிப்பைக் கூட்டுவதுபோல எந்த விஷயமும் இப்போது நடக்கவில்லை என்பதும் ஒரு காரணம்.

> எரிசக்திகளைப் பெருமளவில் இந்தியா இறக்குமதி செய்கிறது என்பது உலகம் அறிந்த சேதி. எரிசக்திகளுக்கு இந்தியா பிற நாடுகளைச் சார்ந்து இருப்பதால் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நம் சந்தை மீதோ, நம் நாணயத்தின் மீது அவ்வளவாக நம்பிக்கை இல்லை.

இதனால், இந்தப் போர் தொடங்கியதில் இருந்து அவர்கள் தொடர்ந்து தங்களது முதலீடுகளை வெளியேற்றி வருகிறார்கள்.

இப்போது சொல்லப்போகும் காரணம் மிக முக்கியமானது…

கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய்

மேலே சொன்னதுதான் – இந்தியா எரிசக்தி இறக்குமதிகளுக்குப் பிற நாடுகளைத்தான் சார்ந்துள்ளது.

இப்போது கச்சா எண்ணெய், எல்.பி.ஜி உள்ளிட்ட எரிசக்தி விலை சர்வதேச சந்தையில் விலையேறி போய் கிடக்கிறது. அவற்றை வாங்க இந்தியாவிற்கு அமெரிக்க டாலர்கள் வேண்டும்.

அமெரிக்க டாலர்கள் வலுவாக உள்ளது என்பதை முன்னரே பார்த்தோம். அது அப்படி வலுவாகி உள்ளதால், அதிக இந்திய ரூபாய்களைக் கொடுத்துதான் அமெரிக்க டாலர்களை வாங்க வேண்டியதாக இருக்கிறது.

அப்படி அதிக இந்திய ரூபாயைக் கொடுக்கும் போதே, அங்கே இந்திய ரூபாயின் மதிப்பு அடிபடுகிறது அல்லவா… இதனால்தான், தற்போது இந்திய ரூபாயின் மதிப்பு இறங்குமுகம் பக்கமாக உள்ளது.

இந்திய ரூபாயின் மதிப்பு ஓரளவு நிலையாக, ஈரான் போர் முடிய வேண்டும். அது எப்போது முடியும் என்பது அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் கையில் உள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'மனிதநேயமற்ற குற்றம்' – ஆப்கானிஸ்தான் மருத்துவமனை மீது பாகிஸ்தான் தாக்குதல்; 400 பேர் உயிரிழப்பு

கடந்த சில மாதங்களாக, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் முட்டி மோதிக்கொண்டுதான் இருந்தன....

ஹார்முஸ் ஜலசந்தி: இந்தியாவுக்கு வர இரண்டு கப்பல்களை ஈரான் அனுமதித்தது எப்படி? – ஜெய்சங்கர் பதில்

ஈரான் போரின் மையமாக 'ஹார்முஸ் ஜலசந்தி'யும் இருந்து வருகிறது. போர் தொடங்கியதில்...

ஹார்முஸ் ஜலசந்திக்கு போர் கப்பலை அனுப்புங்கள் – சீனா, ஜப்பானை அழைக்கும் ட்ரம்ப் – ஏன்? எதற்கு?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எவ்வளவு முயற்சித்தும் ஹார்முஸ் ஜலசந்தியில் தனது பிடியை...

"தேர்தல் முடிந்ததும் பாஜக அதிமுகவை விழுங்கி துப்பிவிடும்" – உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

திருப்பத்தூரில் நேற்று (மார்ச்.15) திமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு...