16
February, 2026

A News 365Times Venture

16
Monday
February, 2026

A News 365Times Venture

“இஸ்லாமியர்கள் எனக்கு சித்தப்பா; நான் அவர்களுக்கு மகன்'' – நோன்பு நிகழ்ச்சியில் ராஜேந்திர பாலாஜி

Date:

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு இஸ்லாமியர்களுடன் அமர்ந்து நோன்பு கஞ்சி அருந்தினார்.

ராஜேந்திர பாலாஜி

இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க.வினர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி பேசும்போது, “விஸ்வகர்மா குலத்தைச் சேர்ந்த இப்ராஹிம் நபிகளின் தந்தை கடவுள் அருளால் இஸ்லாத்தை தழுவி அவரது மகன் இப்ராஹிம் இறை தூதராக இறைவனால் அனுப்பப்படுகிறார்.

இவரின் மகன்களில் ஒருவரான இஸ்மாயில் வழி வந்தவர்கள் இஸ்லாமியர்கள் எனவும், மற்றொரு மகனான யாக்கோபு வழிவந்தவர்கள் யூதர்கள் எனவும் அழைக்கப்படுகின்றனர். இதிலிருந்து இஸ்லாமியர்களுக்கும், விஸ்வகர்மா சமுதாயத்தில் பிறந்த எனக்கும் தொப்புள்கொடி உறவு இருப்பது உறுதியாகி உள்ளது.

எனவேதான் இஸ்லாமியர்களை நான் ‘சித்தப்பா’ என அழைப்பேன். அவர்கள் என்னை ‘மகன்’ என அழைப்பார்கள். இஸ்லாமியர்கள் பிரதிபலன் பார்க்காமல் தி.மு.க.வுக்கு வாக்களித்தார்கள். தி.மு.க. இஸ்லாமியர்களுக்கு ஒரு நலத்திட்டமும் செய்யவில்லை. இஸ்லாமியர்களை தி.மு.க. வாக்களிக்கும் இயந்திரமாக பயன்படுத்தியது.

நோன்பு திறப்பு

இஸ்லாமிய பள்ளி வாசல்களுக்கு காவல்துறையை அனுப்பி சோதனை செய்த வரலாறு தி.மு.க.ஆட்சியில் உண்டு. இஸ்லாமிய இளைஞர்கள் வன்முறையாளர்களாக சித்தரிக்கப்பட்டார்கள். எஸ்.டி.பி.ஐ.கட்சியில் வீரமிக்க இளைஞர்கள் அதிகம் இருக்கிறார்கள். ஆகவே இந்த கட்சியை முடக்க தி.மு.க. முயற்சி செய்கிறது.

இஸ்லாத்தைப் பகைத்தவர்கள் ஆண்டதாக வரலாறு கிடையாது. இஸ்லாமியர்களை நம்பியவர்கள் கெட்டதாக வரலாறு கிடையாது. அ.தி.மு.க. அவர்களை நம்பி இருக்கிறோம். ஆனால் தி.மு.க. அவர்களை வம்புக்கு இழுக்கிறது” என பேசினார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

முதல்வரின் அறைக்குள் முடிவாகும் அறிவிப்புகள்! – பின்னணியில் `நால்வர் அணி'

அடுத்த முறையும் ஆட்சி தொடர்ந்திட வேண்டும் என்கிற முனைப்பில் உள்ள முதல்வர்...

மேற்கு வங்கம்: தனித்து போட்டியிடும் காங்கிரஸ்; உருவாகும் நான்கு முனைப்போட்டி – பாஜக-வுக்கு சாதகமா?

மேற்குவங்கத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்,...

நடிகை குறித்த பேச்சு: `அன்றைக்கு தவறுதலாக ஒரு வார்த்தை வந்துவிட்டது'- நயினார் நாகேந்திரன் வருத்தம்!

தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் தவெக தலைவர் விஜய் பற்றி...