19
February, 2026

A News 365Times Venture

19
Thursday
February, 2026

A News 365Times Venture

இரான் மீது எப்போது தாக்குதல்? – ட்ரம்ப் தலை அசைவிற்காக காத்திருக்கும் அமெரிக்கப் படைகள்!

Date:

2025-ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குப் பின்… மீண்டுமா? – அமெரிக்கா – இரான் இடையே உருவாகி உள்ள இந்த மோதல்போக்கு இந்தக் கேள்வியை எழுப்புகிறது.

இரான் மீது அமெரிக்கா தாக்குதல்

2025-ம் ஆண்டு ஜூன் மாதம் இஸ்ரேல் இரான் மீது கடுமையான தாக்குதலை நடத்திக்கொண்டிருந்தது. அது இரான் வைத்திருக்கும் அணு ஆயுதத்திற்கு எதிராகத்தான்.

அப்போது அமெரிக்காவும் அதே காரணத்தைக் கூறி இரான் மீது தாக்குதல் நடத்தியது. ‘அது வெற்றிகரமான தாக்குதல்’ என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பறைசாற்றினார்.

இரான் உள்நாட்டு போராட்டம்

அதன் பின், அவ்வப்போது ட்ரம்ப் மற்றும் இரானின் உச்சத் தலைவர் இடையே வார்த்தைப்போர் நடந்து வந்தாலும், வேறொன்று பெரிதாக இல்லை.

ஆனால், 2025-ம் ஆண்டின் இறுதியில் டிசம்பர் மாதத்தில், இரான் நாட்டிற்குள் உள்நாட்டுப் போராட்டம் தொடங்கியது. இதற்கு பணவீக்கம் மற்றும் ஊழல் அதிகரித்தது காரணம் ஆகும்.

அமெரிக்கா Vs இரான்

இதைச் சொல்லி, ‘போராட்டக்காரர்கள் மீது ஏதேனும் தாக்குதல் நடந்தால், இதுவரை இல்லாத அளவிற்கான தாக்குதலைச் சந்திக்கும் இரான்’ என்று எச்சரிக்கை விடுத்திருந்தார் ட்ரம்ப்.

இந்த எச்சரிக்கை வலுப்பதும்… பின் தணிவதுமாக இருந்து வந்தது.

ஒரு கட்டத்தில் அமெரிக்கா, இரானுக்கு இடையே பேச்சுவார்த்தை தொடங்கியது.

நேற்று முன் தினம்கூட (பிப்ரவரி 17), அமெரிக்கா, இரான் இடையே பேச்சுவார்த்தை நடந்தது.

இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின், இரான் ‘சில கொள்கைகளை வகுக்க இரு தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளது’ என்று கூறியது… ஆனால், அமெரிக்காவோ முரணாக, ‘இன்னும் நிறைய விஷயங்கள் கலந்தாலோசிக்க உள்ளது’ என்று தெரிவித்தது.

ட்ரம்ப்
ட்ரம்ப்

வெளியான தகவல்

இந்த நிலையில் தான் CNN செய்தி நிறுவனம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, இந்த வாரத்தின் இறுதியில் அமெரிக்கா, இரான் மீது தாக்குதல் நடத்தத் தயாராக இருக்கிறதாம்.

ஆனால், இந்தத் தாக்குதலுக்கு ஒப்புதல் தருவதில் பெரும் யோசனையில் இருக்கிறாராம் ட்ரம்ப்.

ஏற்கெனவே, இரானை நோக்கி அமெரிக்க கப்பற்படை சென்றுகொண்டிருக்கிறது என்று ட்ரம்ப் கடந்த மாதம் சொல்லியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆக, ட்ரம்ப் தலையசைத்தால் இரானை அமெரிக்கா தாக்கும். ‘இப்போதைய சூழலில், ஒரு நாட்டின் மீது தாக்குதல் தேவையா?’ என்பதுதான் ட்ரம்பின் யோசனையாக இருக்கிறதா என்று கூறுகிறார்கள்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

கோவிட் காலத்தில் பணிபுரிந்த செவிலியர்களுக்கு நிரந்தரப் பணி – நாளை கலந்தாய்வு!

கடந்த 2019 மற்றும் 2020 கோவிட் தொற்றுக் காலத்தில் தற்காலிகமாக நியமனம்...

“பிரேமலதா விஜயகாந்த் எடுத்திருக்கும் இந்த சிறப்பான முடிவை வரவேற்கிறேன்” – செல்வப்பெருந்தகை

தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில்...

ஊட்டி : தேசிய கட்சிகளுடன் போட்டி போடும் கழகங்கள் – கூட்டணிக்குள் வெடிக்கும் களேபரங்கள்!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு தேதி நெருங்கி வரும் சூழலில்,...

`இலவசக் கலாசாரம் கவலையளிக்கிறது' – தமிழக அரசின் மனுமீதான விசாரணையில் உச்ச நீதிமன்றம் அதிருப்தி!

மின்சாரத் துறை சட்டத் திருத்தம் 2024-ன் விதி 23-ஐ எதிர்த்து தமிழக...