14
February, 2026

A News 365Times Venture

14
Saturday
February, 2026

A News 365Times Venture

இந்தியா முழுவதும் விவசாய மற்றும் தொழிலாளர் சங்கம் போராடுவது ஏன்? 6 புள்ளிகள்|Quick Points

Date:

இன்று இந்தியா முழுவதும் தொழிலாளர் சங்கங்களும், விவசாய சங்கங்களும் போராட்டம் நடத்தி வருகின்றன. இது நாடு முழுவதுமே பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

இந்தப் போராட்டத்திற்கான காரணத்தை 6 புள்ளிகளில் தெரிந்துகொள்ளலாம்… வாங்க…

> இந்தியா – அமெரிக்கா ஒப்பந்தத்தில், பல அமெரிக்க விவசாய மற்றும் பால் பொருள்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது… வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. இது இந்திய விவசாயிகளைப் பெரிதும் பாதிக்கும்.

இதனால், இந்திய – அமெரிக்க ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள விவசாயம் மற்றும் பால் பொருள்கள் குறித்த அறிவிப்புகளை ரத்து செய்ய வேண்டும்.

விவசாயம்

> 2025-ம் ஆண்டு நவம்பர் மாதம் புதிய தொழிலாளர் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் முன்பிருந்த 29 சட்டங்கள் 4 சட்டங்களாக மாற்றப்பட்டுள்ளன.

இந்தச் சட்டத்தினால் தொழிலாளர்களின் பாதுகாப்பு பாதிக்கப்படலாம். மேலும், நிறுவனங்கள் எளிதாக தொழிலாளர்களை வேலையில் அமர்த்துவதும்… நீக்குவதும் நடக்கும். கூடவே, தொழில்கள் கான்ட்ராக்ட் அடிப்படையில் மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று தொழிற்சங்கங்கள் கூறுகின்றன.

இதனால், இந்தத் திருத்தத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று தொழிற்சங்கங்களின் கோரிக்கை வைக்கின்றன.

கூடுதலாக…

> மின்சாரத் திருத்தச் சட்டம் மற்றும் வரைவு விதை சட்டம் திரும்பப் பெற வேண்டும்.

விவசாயிகளின் உயிர்நாடிகளில் ஒன்று, மின்சாரம். விவசாயத்தில் அதிக வருமானம் கிடைக்கவில்லை என்றாலும் இலவச மின்சாரம் விவசாயிகளின் செலவை ஓரளவு குறைக்கிறது.

இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மின்சாரத் திருத்தச் சட்டம் இலவச மின்சாரத்தை ரத்து செய்யலாம்.

தொழில்
தொழில்

வரைவு விதை மசோதா கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்தை அதிகரிக்கும் என்று விவசாயிகள் இந்த இரு மசோதாகளையும் எதிர்க்கின்றனர்.

> பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்.

> 100 நாள் வேலைத் திட்டத்திற்கு முன்பு இருந்த 90 – 10 நிதி பகிர்தலையே மீண்டும் கொண்டு வர வேண்டும்.

> விக்சித் பாரத் – வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதி மிஷன் (கிராமின்) மற்றும் சாந்தி சட்டத்தைத் திரும்ப பெற வேண்டும்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"அடுத்தவர் குதிரையில் சவாரி செய்யும் நீங்க எப்படி ஒரிஜினல் ஆவீங்க?"- விஜய்க்கு அதிமுக பதிலடி

சேலம், சீலநாயக்கன்பட்டியில் நேற்று (பிப்.13) தவெக நிர்வாகிகளின் சந்திப்பு நடைபெற்றது....

இந்தியா மீது திடீர் 'ஐஸ்' மழையைப் பொழியும் சீனா! – இந்தத் திடீர் பாசம் ஏன்?| Explained

இந்தியா, சீனாவிற்கு இடையே எல்லைப் பிரச்னையைத் தாண்டி... ஆசிய நாடுகளிலேயே யார்...

"விஜய் என் நண்பர்தான்.. ஆனால்.." – எஸ்.பி. வேலுமணி கடும் விமர்சனம்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பிற்கு இன்னும் சில நாள்களே உள்ளன. திமுக...

அமெரிக்கா: அதிகாரியால் விபத்தில் கொல்லப்பட்ட இந்திய மாணவி; ரூ. 260 கோடி இழப்பீடு வழங்க முடிவு

அமெரிக்காவில் காவல் துறை அதிகாரியால் கொல்லப்பட்ட ஆந்திராவைச் சேர்ந்த மாணவி ஜாஹ்னவி...