19
March, 2026

A News 365Times Venture

19
Thursday
March, 2026

A News 365Times Venture

“இந்தியா மீது தாக்குதல் நடத்த தயாராக இருந்தோம்; ஆனால், இரவுக்குள்..'' – ஷெபாஸ் ஷெரீப் பேச்சு

Date:

இந்தியா பாகிஸ்தானைத் தாக்கியது என்பதை முன்னர் ஒத்துகொள்ளாமல் இருந்த பாகிஸ்தானின் பொய் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவந்து கொண்டிருக்கிறது. அதுவும் அவர்களின் வாயில் இருந்தே உண்மை வெளிவந்து கொண்டிருக்கிறது.

இரு வாரங்களுக்கு முன்னால், பாகிஸ்தானை இந்தியா தாக்கியது என்று பேசியிருந்தார் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப். இப்போது மீண்டும் அதை உறுதி செய்துள்ளார் ஷெபாஸ் ஷெரீப்.

Operation Sindoor – ஆபரேஷன் சிந்தூர்

அஜர்பைஜானில் பேசிய இவர், “மே 9 – 10 நள்ளிரவில், ஃபஜ்ர் பிரார்த்தனைக்குப் பிறகு, நாங்கள் இந்தியாவைத் தாக்க திட்டமிட்டு இருந்தோம். ஆனால், அதற்கு முன்பாகவே, இந்தியாவின் பிரமோஸ் ஏவுகணைகள் பாகிஸ்தானின் ராவல்பிண்டி விமான நிலையம் உள்ளிட்ட பல இடங்களைத் தாக்கியது” என்று கூறியுள்ளார்.

கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பஹல்காமில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு எதிராக, மே 7-ம் தேதி ஆபரேஷன் சிந்தூரை நடத்தியது இந்திய ராணுவம். இந்த ஆபரேஷனில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 தீவிரவாத முகாம்களைக் குறி வைத்து இந்தியா அழித்தது.

ஷெபாஸ் ஷெரீஃப்

இதற்கு பாகிஸ்தான் ராணுவம், இந்திய மக்கள் மீது தாக்குதல் நடத்தி எதிர்வினை ஆற்றியது. இதற்கு இந்தியா பதிலடி கொடுக்க, இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு அதிகமானது. பின்னர், மே 10-ம் தேதி இரு நாடுகள் தாக்குதல் நிறுத்தத்தை அறிவித்தன.

ஆனால், அப்போதெல்லாம் இந்தியா பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது என்பதை ஒத்துக்கொள்ளாத பாகிஸ்தான், இப்போது உண்மையை பேசுகிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

தேமுதிக-வுக்கு எவ்வளவு ஓட்டு? விஜய்யின் தாக்கம் என்ன? – நேர்காணலில் ஸ்டாலின் கேட்ட முக்கிய கேள்வி!

சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் முதல்வர்...

'ரூ1.25 லட்சத்துக்கு குடும்பத்துக்கே விருப்ப மனு வாங்குனேன்!' – அறிவாலயத்தை வியக்க வைத்த உடன்பிறப்பு

அறிவாலயத்தில் வேட்பாளர் நேர்காணலை பரபரப்பாக நடத்திக் கொண்டிருக்கிறது திமுக. இன்று நடந்த...

தேனி: திமுக-வில் பன்னீர்; களத்தில் டிடிவி மனைவி? இழந்த செல்வாக்கை மீட்குமா அதிமுக? | முந்துவது யார்?

முந்துவது யார்?தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தற்போதைய நிலவரப்படி, யார் களத்தில் முந்துகிறார்கள்...

”விஜய்யிடம் கூட்டணி குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை!” – நயினார் நாகேந்திரன்

தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன், தனது இல்லத்தில் இன்று செய்தியாளர்களைச்...