2
May, 2026

A News 365Times Venture

2
Saturday
May, 2026

A News 365Times Venture

“இங்கே ஒரு கூட்டம் `திமுகவை அழிக்க வேண்டும்' என கத்திக்கொண்டிருந்தது; அவர்கள்.!" – நடிகர் வடிவேலு

Date:

சென்னை கொளத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் வடிவேலு கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது, “முதலமைச்சரின் 73-வது பிறந்தநாளைக் கொண்டாடும் இவ்வேளையில், அவரது செயல்பாடுகளைப் பார்த்தால் அது 37-வது பிறந்தநாள் போல இளமையாகத் தெரிகிறது.

எங்கோ போர் நடக்கிறது என்பதால், கடந்த சில நாட்களாக ஒரு பீதி கிளப்பப்பட்டது. யாருக்குமே உணவு கிடைக்காது, பழைய கொரோனா காலத்தைப் போலவும், பணமதிப்பிழப்பு காலத்தைப் போலவும் மக்கள் வரிசையில் நிற்க வேண்டிய சூழல் வரும் என்று அச்சமூட்டினார்கள்.

பெட்ரோல், டீசல் நிலையங்களில் மக்கள் குவிந்தனர். ஹோட்டல்கள் மூடப்பட்டன. எங்கோ நடக்கும் போரினால் நம் வீட்டு அடுப்பு எரியாது என்று பயமுறுத்தினார்கள். அந்த இக்கட்டான சூழலிலும், நமது தமிழக முதலமைச்சர் அவர்கள் பதற்றமடையாமல், உடனடியாகப் பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதினார். “முதலில் இந்தப் பிரச்சனையைத் தீர்க்க என்ன வழி என்று பாருங்கள்” என்று ஆக்கப்பூர்வமாகச் செயல்பட்டார்.

ஸ்டாலின்

இங்கே ஒரு கூட்டம் “திமுகவை ஒழிக்க வேண்டும், அழிக்க வேண்டும்” என்று கத்திக்கொண்டிருந்தது. மக்கள் அழியாமல் இருக்க என்ன வழி என்று யோசிக்காமல், ஒரு இயக்கத்தை அழிப்பதையே குறிக்கோளாகக் கொண்டவர்கள் கடைசியில் தாங்கள்தான் காணாமல் போகிறார்கள். திமுக என்பது தஞ்சாவூர் கோபுரத்தைப் போன்றது; அது ஒரு மிகப்பெரிய வரலாற்றுச் சாம்ராஜ்யம். அதை யாராலும் அசைக்க முடியாது. இதுபோன்ற வரலாறு எந்தக் கட்சிக்கும் கிடையாது.

திடீரென மக்களின் வங்கிக் கணக்கில் 5,000 ரூபாய் வரவு வைக்கப்பட்ட செய்தியைக் கேட்டு, தி.மு.க அழிய வேண்டும் என்று கனவு கண்டவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். மக்கள் இன்ப அதிர்ச்சியில் இருந்தபோது, எதிரிகள் அதிருப்தியில் இருந்தார்கள். இது வெறும் ஆரம்பம்தான், முதலமைச்சர் இன்னும் எக்கச்சக்கமான நன்மைகளை மக்களுக்குச் செய்யப்போகிறார். மேடையில் வசனம் பேசுவதை விட, செயல்பாட்டில் காட்டுவதே தி.மு.க-வின் பாணி.

தமிழ்நாட்டில் இந்தக் கட்சி இல்லை என்றால் இத்தனை ஆண்டுகளாக நாம் பெற்ற அனைத்தையும் இல்லாமல் ஆக்கிவிடுவார்கள். தமிழ்நாடு என்றப் பெயரைக் கூட மாற்றிவிடுவார்கள். இந்தத் தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சி இல்லை என்றால், ஒட்டுமொத்தப் பாதுகாப்பும் கேள்விக்குறியாகிவிடும். பெண்களுக்கும், குழந்தைகளுக்கும், சாமானிய மக்களுக்கும் பாதுகாப்பு அரணாக இருப்பது முதலமைச்சர் ஸ்டாலின் மட்டும்தான். ஏந்த நெருக்கடியையும் சந்திக்கும் ஆற்றல் ஸ்டாலினுக்கு இருக்கிறது.

vadivelu
vadivelu

2026 சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவது நமது லட்சியம் மட்டுமல்ல, அது நிச்சயம் நடக்கும். தற்போது நடக்கும் இந்த விழாக்கள், அவர் மீண்டும் முதலமைச்சராகப் பதவியேற்பதற்குக் கொடுக்கப்படும் முன்கூட்டிய வாழ்த்துகளாகவே நான் பார்க்கிறேன்.

முதலமைச்சர் நமக்கு ஒரு செய்தியைச் சொல்லாமல் சொல்கிறார். எத்தனை மேடு பள்ளங்கள் வந்தாலும், தடைகளைத் தாண்டி முன்னேற வேண்டும். ‘சத்தியமே லட்சியமாய் கொள்ளடா’ என்ற வரிகளுக்கேற்ப, நாம் அஞ்சாமல் கடமையாற்ற வேண்டும். 2026-ல் ஒரு மிகப்பெரிய வெற்றியை அவருக்குப் பரிசாக அளித்து, தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ நாம் பாடுபட வேண்டும்.” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`மனக்குமுறல்கள் போராட்டமாக வெடிப்பது இயல்புதான்' – கோவையில் செல்வப்பெருந்தகை பேட்டி

தமிழ்நாடு அரசியல் களத்தில் பரபரப்பாக 2026 சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது....

'தவெக-விடம் ஆட்சியை பிடிக்கும் அளவிற்கு வலிமை இல்லை' – திருமாவளவன் பேச்சு

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், திமுக கூட்டணி தான் வெற்றி...

"சில தொகுதிகளில் விசிக தோழர்களிடம் ஒற்றுமை குறைவு" – திருமாவளவன் வருத்தம்

நாளை மறுநாள் (மே 4), தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகும்...