30
May, 2026

A News 365Times Venture

30
Saturday
May, 2026

A News 365Times Venture

"'ஆபரேஷன் சிந்தூர் 2.0' -க்கு இந்திய ராணுவம் தயாராகி வருகிறது!" – ராணுவத் தளபதி ஜெனரல் திவேதி

Date:

தேவை ஏற்பட்டால் ‘ஆபரேஷன் சிந்தூர் 2.0’ நடவடிக்கையைத் தொடங்குவதற்கு இந்திய ஆயுதப் படைகள் முழுத் தயார் நிலையில் இருப்பதாக ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியப் ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளும் தங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பைத் தீவிரமாக மேம்படுத்தி வருவதாகவும் அவர் உறுதியளித்தார்.

Operation Sindoor – ஆபரேஷன் சிந்தூர்

கடந்தாண்டு பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் பலியானதைத் தொடர்ந்து, அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தானில் இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

புனேயில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு அகாடமியின் (NDA) 150-வது பயிற்சிப் படிப்பின் நிறைவு நாள் அணிவகுப்பு விழாவில்செய்தியாளர்களைச் சந்தித்த ஜெனரல் உபேந்திர திவேதி, “ஆபரேஷன் சிந்தூர் பொறுத்தவரை, அது இன்னும் முடிவுக்கு வரவில்லை. தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

தற்போது தற்காலிகப் போர் நிறுத்தம் மட்டுமே நிலவுகிறது. எனவே, ஒருவேளை அடுத்த கட்டப் போர் மூண்டால், ‘ஆபரேஷன் சிந்தூர் 2.0’ நடவடிக்கையை எதிர்கொள்ள இந்திய ராணுவமும், மற்ற இரு படைகளும் மிகச் சிறப்பான முறையில் தயாராகி வருகின்றன.

Upendra Dwivedi
Upendra Dwivedi

தற்போது போர்க்களங்கள் வெளிப்படையாக மாறிவிட்டன. நமது ஒவ்வொரு அசைவும் அடுத்த தரப்பிற்கு எளிதில் தெரிந்துவிடுகிறது.

எனவே, எல்லையோரப் பகுதிகளில் நமது படைகளை நிலைநிறுத்துவது, கையாள்வது மற்றும் நமது வீரர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது ஆகியவற்றில் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.” எனக் கூறியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ஈரான் அணு ஆயுதத்தின் மீது அமெரிக்கா ஃபுல் ஃபோக்கஸ்; ஆனால், சீனாவோ அமெரிக்காவிற்கு எதிராக பக்கா ரெடி!

ஈரானிடம் இருந்து செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வாங்க அமெரிக்கா தீவிரமாக முயற்சித்து வருகிறது....

கர்நாடகா விறுவிறுப்பு: 'முதல்வர்' சிவக்குமாருக்கு இரண்டு துணை முதல்வர்களா? கார்கே நகர்த்தும் காய்!

சட்டமன்றத் தேர்தல் முடிந்த தென் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளாவிலேயே இன்னும் பரபரப்பு...

'எப்பேற்பட்ட அதிகாரிகள் இருந்த துறை தெரியுமா?' – அருண் ஐ.பி.எஸ்ஸை கடுமையாக கண்டித்த நீதிபதிகள்!

தனியார் கட்டுமான நிறுவன உரிமையாளர் சந்தோஷ் சர்மா குண்டர் சட்டத்தில் சிறையில்...