பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பிலிருந்து (OPEC) வெளியேறுவதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்திருக்கிறது.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையேயான போர் உலகம் முழுவதும் எரிபொருள் வர்த்தகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
உலகின் எரிபொருள் தேவையில் கணிசமான அளவுக்கு வித்திடும் ஹார்முஸ் நீரிணை வழியாக எரிபொருள்களை நிரப்பி வரும் கப்பல்களை இயக்க முடியாத சூழல் நிலவி வருகிறது.
இதனால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளும் எரிபொருள் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டிருக்கின்றன.
ஐக்கிய அரபு அமீரகமும் தங்கள் நாட்டிலிருந்து எரிபொருள்களை ஹார்முஸ் நீரிணை வழியாக ஏற்றுமதி செய்ய முடியாமல் பாதிப்படைந்துள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்பும் ‘OPEC நாடுகளால் ஏனைய நாடுகளும் கடும் அவதிப்படுகிறது’ எனக் குற்றஞ்சாட்டியிருந்தார்.

ஐக்கிய அரபு அமீரகமும் ஹார்முஸ் நீரிணையை பாதுகாக்க OPEC அமைப்பு தீர்க்கமாக எதையும் செய்யவில்லை என கவலை தெரிவித்திருந்தது.
இதைத்தொடர்ந்தே Gulf நாடுகளை உள்ளடக்கிய பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பில் (OPEC) இருந்து ஐக்கிய அரபு அமீரகம் வெளியேறுவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.




