தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், அதற்கு முன்னதாகவே மாநிலங்களவையில் காலி ஆகும் இடங்களுக்கு தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு 3வது இடம்தான் கிடைக்கும் என்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களுக்கு தமிழ்நாட்டின் நிலைமை தெரியாதது போல நடிக்கலாம்…
ஆனால் internal சர்வே முடிவுகள் எல்லாம் அவர்களின் மேசையில்தான் இருக்கும் அல்லவா? ஒரு மாதிரி இணைத்துள்ளேன்.
அதனால்தான் 2026 சட்டமன்றத் தேர்தலை காத்திருக்காமல் ராஜ்யசபா தேர்தலை முன்கூட்டியே நடத்த அவசரம்.
காரணம் எளிது… இப்போது எப்படியாவது 2 ராஜ்யசபா சீட்களை எடுத்துக்கொள்ளலாம்.
தேர்தல் முடிந்த பிறகு ஒரு சீட்டுக்குக் கூட கணக்கு போட முடியாத நிலை வந்துவிட்டால் என்ன செய்வது?
நயினார் நாகேந்திரன் மற்றும் எடப்பாடி பழனிசாமி இணைந்தால் பெரிய அலை வருமாம் என்கிறார்கள்…
உள்துறை அமைச்சர் அமீத் ஷா அவர்களுக்கு தமிழ்நாட்டின் நிலைமை தெரியாதது போல நடிக்கலாம்… ஆனால் internal சர்வே முடிவுகள் எல்லாம் அவர்களின் மேசையில்தான் இருக்கும் அல்லவா?
ஒரு மாதிரி இணைத்துள்ளேன்.
அதனால்தான் 2026 சட்டமன்றத் தேர்தலை காத்திருக்காமல் ராஜ்யசபா தேர்தலை முன்கூட்டியே… pic.twitter.com/gDJTjT9XBq— Manickam Tagore .Bமாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) February 18, 2026
ஆனால் 2026-ல் 20% வாக்கு கூட கடக்க முடியுமா என்பது தான் பெரிய கேள்வி! அதிமுக மூன்றாம் இடம் என்பது இப்போது ‘அதிர்ச்சி செய்தி’ அல்ல… மெதுவாக ‘அரசியல் உண்மை’ ஆகி கொண்டிருக்கிறது.
தமிழ்நாடு மக்களை அரசியல் கணக்குப் புத்தகத்தில் கணக்கிட முடியாது. அவர்கள் முடிவு எடுத்துவிட்டால், எந்த அவசரத் திட்டங்களாலும் அதை மாற்ற முடியாது” என்று பதிவிட்டிருக்கிறார்.




