9
June, 2026

A News 365Times Venture

9
Tuesday
June, 2026

A News 365Times Venture

'அது நான் இல்லை, போதைப்பொருள் கடத்தலுக்கும், எனக்கும்.!'- லீமா ரோஸ் சகோதரர் ஜான் பிரிட்டோ

Date:

போதைப் பொருள் கடத்தலுக்கும், எனக்கும் தொடர்பில்லை என அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸின் சகோதரர் ஜான் பிரிட்டோ விளக்கம் அளித்திருக்கிறார்.

ரூ.258 கோடி மதிப்பிலான சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை நடத்திய சோதனைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

லீமா ரோஸ்

இந்த வழக்கின் மூளையாகச் செயல்பட்டவர் ஜான் பிரிட்டோ என அமலாக்கத்துறை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.

இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பி இருக்கிறது. காரணம், ஜான் பிரிட்டோ தவெகவின் முக்கிய நிர்வாகியும், அமைச்சருமான ஆதவ் அர்ஜுனாவின் மாமியாரும் அதிமுக எம்.எல்.ஏவுமான லீமா ரோஸின் சகோதரர் என்று தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸின் சகோதரர் ஜான் பிரிட்டோ காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்திருக்கிறார்.

புகார் அளித்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், ” மாரிதாஸ் என்னைப் பற்றி அவதூறாக செய்தி பரப்பிக்கொண்டே இருக்கிறார். போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஜான் பிரிட்டோ வேறு, நான் வேறு. அது நான் இல்லை.

ஜான் பிரிட்டோ
ஜான் பிரிட்டோ

என் மீது ஆதாரமின்றி பொய்க் குற்றச்சாட்டுகள் பரப்பப்படுகின்றன. போதைப் பொருள் கடத்தலுக்கும் எனக்கும் தொடர்பில்லை. எங்கள் பெயரை கெடுப்பதற்காகவே இதுபோன்ற விஷயங்களை செய்கிறார்கள்.

தவறான செய்திகளைத் தவிர்க்க வேண்டும். என்னுடைய தொழில் பாதிக்கிறது. என் மீது போதைப் பொருள் வழக்கு எதுவும் இல்லை.” என்று கூறியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

அனல் பறந்த ஆலோசனைக் கூட்டம்: காங்கிரஸை வறுத்தெடுத்த மாநிலக் கட்சிகள்; 'அன்போடு' ராகுல் காந்தி பதில்!

டெல்லியில் ஜூன் 8 (நேற்று) நடைபெற்ற இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில்,...

DAC: OMR-ல் சாட்டிலைட் அலுவலகம் தொடக்கம்! சென்னையின் முதல் English-Themed வசிப்பிட திட்டம் அறிமுகம்

சென்னையின் மிகவேகமாக வளர்ந்து வரும் குடியிருப்பு மற்றும் IT தளமான பழைய...

கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தான்; ஆனால், `அமைச்சர்' பதவிகளில் ஏகப்பட்ட பிரச்னை!

சில மாதங்களாக, கர்நாடகா முதலமைச்சர் பதவிக்கு குழப்பம் நீடித்து வந்தது. அது...

கிள்ளியூர்: காங்கிரஸ் அமைச்சர் தொகுதியில் மறு தேர்தல் நடத்த தவெக வேட்பாளர் மனு; கூட்டணியில் குழப்பம்

நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 6...