31
October, 2026

A News 365Times Venture

31
Saturday
October, 2026

A News 365Times Venture

அதிமுக-விலிருந்து வேலுமணி, சி.வி.சண்முகம் நீக்கம்? – இ.பி.எஸ் எடுத்த அதிரடி முடிவு?

Date:

அ.தி.மு.கவிலிருந்து முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணியை நீக்க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கான அறிவிப்பு விரைவில் வரலாம் என்றும் சொல்லப்படுகிறது. நடப்பது என்ன?

எடப்பாடி – எஸ்.பி வேலுமணி – சிவி சண்முகம்

சி.வி.சண்முகம் வெளிப்படையாகவே எடப்பாடி பழனிசாமியைக் காட்டமாக விமர்சித்து வந்தார்.

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் மூன்றாவது இடத்துக்கு வந்ததை எங்கள் பொதுச் செயலாளரால் கொஞ்சம்கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இரண்டு தொகுதியிலும் வேலுமணி & சண்முகம் தரப்பு உள்ளடி வேலைகள் பார்த்ததாக அவர் காதுகளுக்கு செய்திகள் போகவே இன்னும் கடுப்பாகிவிட்டார்.

எஸ்.பி வேலுமணி - சி.வி சண்முகம்
எஸ்.பி வேலுமணி – சி.வி சண்முகம்

அதிலும், தாராபுரத்தில் நடந்த சம்பவங்கள் அவருக்கு இன்னும் வேதனையைக் கொடுத்துவிட்டது. வேலுமணியும் சண்முகமும் வெளியில் இறங்கிவந்து பேசுவதுபோல் காட்டிக்கொண்டாலும், கட்சியில் இருக்கும் எம்.எல்.ஏக்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள். மூன்றில் இரண்டு பங்கு எம்.எல்.ஏக்களோடு த.வெ.க அரசுக்கு ஆதரவாக நிற்கவும் முடிவு செய்துவிட்டார்கள். இந்தச் செய்திகள் எடப்பாடியாரின் காதுக்குப் போகவே, ,’இவர்களை இப்படியே விட்டால் கட்சியை அழித்துவிடுவார்கள், பேசாமல் கட்சியை விட்டு நீக்கிடலாமா?’ என நெருக்கமானவர்களிடம் ஆலோசனை நடத்தினார். ஆனால், அப்படிச் செய்தால், எம்.எல்.ஏ பதவியோடு அவர்கள் த.வெ.கவுக்குப் போய்விடுவார்கள், கட்சியிலிருந்தும் பலரை அழைத்துச் சென்றுவிடுவார்கள் என ஒருசிலர் சொல்லவும் கொஞ்சம் பொறுமையாக இருக்கிறார். ஆனால், அவர் ஒரு விஷயத்தில் இறுதி முடிவை எடுக்காமல், வெளியில் அதுகுறித்துப் பேசமாட்டார். மனதளவில் இருவரையும் நீக்கத் தயாராகிவிட்டார். விரைவில் அதற்கான அறிவிப்புகள் வெளியில் வரலாம்” என்கிறார்கள்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

தங்கை மகளின் திருமணம்; எலஹங்கா அரண்மனையை மறுத்த ஜெகன்; `கீழ்த்தரமானவள் நான் அல்ல' – ஷர்மிளா வேதனை

ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின்...

Omar Abdullah: ஊடகவியலாளரை மணந்த ஜம்மு & காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா – வைரலாகும் புகைப்படங்கள்!

ஜம்மு & காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, ஊடகவியலாளர் நிதி ரஸ்தான்...

'டெல்லியின் மெசேஜ்' – இடைத்தேர்தலுக்கு விஜய் போடும் ஸ்கெட்ச்! – திட்டம் என்ன?

தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் விரைவில் நடக்குமென எதிர்பார்க்கப்படும் நிலையில், முதல்வர்...