9
November, 2026

A News 365Times Venture

9
Monday
November, 2026

A News 365Times Venture

"அடுத்த ஆண்டு ரூ.10,000 கோடி பட்டாசு விற்பனை – மாபெரும் இலக்கு" – அமைச்சர் கீர்த்தனா

Date:

இந்த ஆண்டு (2026) தீபாவளியையொட்டி ரூ.7,000 கோடிக்கு பட்டாசு விற்பனை ஆகியுள்ளதாக பட்டாசு விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தமிழ்நாட்டின் தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கீர்த்தனா தனது எக்ஸ் பக்கத்தில், “சிவகாசியின் தளராத உழைப்பும் தன்னம்பிக்கையும் தமிழ்நாட்டின் பெருமை!

ஒவ்வொரு பட்டாசுக்குப் பின்னாலும் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் கடின உழைப்பும், திறமையும், எதிர்காலக் கனவுகளும் அடங்கியுள்ளன.

மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்களின் தலைமையில் செயல்படும் நமது அரசு, இந்தப் பாரம்பரியமிக்க தொழிலைப் பாதுகாக்கவும், தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், சிவகாசியை மேலும் பல உயரங்களுக்குக் கொண்டு செல்லவும் உறுதுணையாக இருக்கும்.

அடுத்த ஆண்டில் ரூ.10,000 கோடி விற்பனை என்ற மாபெரும் இலக்கை நோக்கிப் பயணிக்கும் இத்தொழிலுக்கு, அந்த மைல்கல்லை எட்ட தமிழ்நாடு அரசு அனைத்து வகையிலும் முழு ஆதரவையும் வழங்கும் என்று உறுதியளிக்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ஈரான் போரின் அடுத்த கட்டம்: ட்ரம்பிற்கு '2 நாள் திட்டத்தை' பரிந்துரைக்கும் ஈரான் – அது என்ன?

அமெரிக்க மக்கள் ஈரான் போரில் கடும் அதிருப்தியில் உள்ளனர். அதன் விளைவாகவே,...

அண்ணா நூலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!

கடந்த திமுக ஆட்சியில் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட,...

திருவண்ணாமலை: ஏரியில் மூழ்கி சிறுமிகள் உட்பட 5 பேர் மரணம் – காப்பகத்தின் அலட்சியத்தால் விபரீதம்?

திருவண்ணாமலை அடுத்த பெரும்பாக்கம் சாலையில் ஆணாய்பிறந்தான் கிராமம் உள்ளது. இங்கு, தமிழக...

தேனியில் SI கொலை: "குடும்பத்திற்கு ரூ.40 லட்சம் நிவாரண நிதி" – முதல்வர் விஜய் அறிவிப்பு

நேற்று (நவம்பர் 8) தேனி மாவட்டத்தில் சில நபர்களால் தாக்கப்பட்டதில் உயிரிழந்த...