23
June, 2026

A News 365Times Venture

23
Tuesday
June, 2026

A News 365Times Venture

அங்கீகரிக்கப்பட்டு பதிவுசெய்யப்பட்ட `சாம்சங் தொழிற்சங்கம்' – வரவேற்று மகிழும் தொழிலாளர்கள்!

Date:

‘தொழிற்சங்கம் அமைக்க சட்டப்பூர்வ அங்கீகாரம், 8 மணி நேர வேலை, உழைப்புக்கேற்ற ஊதியம்’ உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து 35 நாள்களாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட சென்னை, ஶ்ரீபெரும்புதூர் சாம்சங் இந்தியா எலெக்ட்ரானிக்ஸ் பிரைவேட்  லிமிடெட்’  தொழிலாளர்கள் போராடினர். கடந்த ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி முதல் அக்டோபர் 16ம் தேதி வரை நடந்த இப்போராட்டம் தமிழக அரசிம் தலையீட்டல் பேச்சுவார்த்தைக்குக் கொண்டுவரப்பட்டு, கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற உறுதியுடன் வாபஸ் பெறப்பட்டது.

ஸ்ரீபெரும்புதூர் சாம்சங் ஊழியர்கள் போராட்டம்

இதையடுத்து 8 மணி நேர வேலை, உழைப்புக்கேற்ற ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. ஆனால், ‘சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம்’ என்கிற பெயரில் தொழிற்சங்கம் அமைப்பதற்கான தொழிற்சங்கப் பதிவு கிடைக்காமலே இருந்தது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடந்து வந்தது.

இந்நிலையில் சாம்சங் தொழிலாளர்கள் கோரிக்கை வைத்து, நீண்ட நாள்கள் பல தடைகளை மீறி போராட்டம் நடத்தியதன் பலனாக, ‘சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம்’ என்கிற பெயரிலேயே தொழிற்சங்கம் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டுள்ளது. 1926 தொழிற்சங்கம் அமைப்பதற்கான சட்ட உரிமையின் அடிப்படையில் இந்தத் தொழிற்சங்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

‘சாம்சங்’ என்ற பெயரை தொழிற்சங்கத்திற்கு வைக்க அனுமதிக்க மாட்டோம்’ என சாம்சங் நிர்வாகம் பிடிவாதம் பிடித்து வந்த நிலையில், ‘சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம்’ என்கிற பெயரிலேயே தொழிற்சங்கம் பதிவு செய்யப்பட்டதை தொழிலாளர்கள் மற்றும் சி.ஐ.டி.யூ அமைப்பின் தொடர் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றியாக சாம்சங் தொழிலாளர்கள் மகிழ்வுடன் வரவேற்று வருகின்றனர்.

இந்திய அரசியலமைப்பு வழங்கியிருக்கும் இந்தியாவில் தொழிற்சங்கம் அமைப்பதற்கான அடிப்படையான தொழிலாளர்கள் உரிமைச் சட்டத்தை அமல்படுத்த அடக்குமுறைகளைத் தாண்டி இவ்வளவு தூரம் போராட வேண்டியிருக்கிறது என்று மகிழ்ச்சியுடன், தங்களின் வருத்தங்களையும் தெரிவித்து வருகின்றனர் போராடிய சாம்சங் தொழிலாளர்கள். இதுபோல் ஒவ்வொரு தனியார் துறைகளிலும் தொழிலாளர்கள் துணிச்சலுடன் போராடி தங்களுக்கான உரிமைகளைப் பாதுகாத்து, பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் உரிமைகளுக்காகப் போராடுபவர்களை அலட்சியாகப் பார்க்காமல், மக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் என்றும் போராடிய சாம்சங் தொழிலாளர்கள் கூறிவருகின்றனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

கத்தார் கேஸ் ஆலையில் பயங்கர வெடிவிபத்து; 12 இந்தியர்கள் உட்பட 13 பேர் உயிரிழப்பு; என்ன நடந்தது?

கத்தாரில் உள்ள ஒரு மாபெரும் எரிவாயு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில்,...

சட்டமன்றக் கூட்டம்: இன்று எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு முதல்வர் விஜய் பதிலளிப்பாரா? | Live Update

முதல்வரின் பதில்கள் இன்று!சட்டமன்றத்தின் மூன்றாம் நாள் கூட்டம் இன்று நடைபெறவிருக்கிறது. நேற்றைய...

4 வாக்காளர் அட்டைகள் வைத்திருப்பதாக வழக்கு; பிரகாஷ்ராஜுக்கு பிடிவாரண்டா?உண்மை என்ன?

நான்கு மாநிலங்களில் வாக்காளர் அட்டை வைத்திருப்பதாக நடிகர் பிரகாஷ்ராஜுக்கு எதிராக தாக்கல்...

`இணைந்தும், இணையாமலும்.!' – வெளிநடப்பு செய்த அதிமுகவினர்; உள்ளே வேலுமணி – வெளியே எடப்பாடி!

இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு, இன்று (ஜூன்.22) தமிழ்நாடு சட்டப்பேரவை கூடியிருக்கிறது....