7
March, 2026

A News 365Times Venture

7
Saturday
March, 2026

A News 365Times Venture

Vijay: `வழக்கறிஞர்கள் மூலம் அனுமதி மறுப்பு?' – நீலாங்கரை இல்லத்தில் தங்க அனுமதி கோரும் சங்கீதா

Date:

தவெக தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்துக் கோரி செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். விஜய் வேறு ஒரு நடிகையுடன் தொடர்பில் இருந்ததால் விவகாரத்து கேட்கிறேன் என்றும் மனுவில் கூறியுள்ளார். ‘கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதை அறிந்தேன். அந்த உறவை விட்டுவிடுவதாக விஜய் உறுதி கொடுத்தார்.

நடிகர் விஜய்

ஆனால், மீண்டும் அதே உறவில் நீடித்தார். விஜய்யும் அந்த நடிகையும் வெளிநாடுகளுக்கு பல முறை ஒன்றாக பயணம் செய்தனர். அந்தப் புகைப்படங்களை நடிகை தனது சோசியல் மீடியாவில் பல முறை பதிவிட்டார்.’ உள்ளிட்டப் பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில், நடிகர் விஜய் பிரபல நடிகையுடன் திருமண விழாவில் பங்கேற்றது பெரும் பேசுபொருளானது.

இந்த நிலையில் நடிகர் விஜயின் மனைவி சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இரண்டாவது மனுத்தாக்கல் செய்திருக்கிறார். அதில், “எங்களுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக, எங்கள் திருமணத்தை ரத்து செய்ய வேண்டும். பரஸ்பர சம்மதத்துடன் பிரிய மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்ததால், தற்போது நீதிமன்றத்தை நாடியுள்ளேன்.

பிரிட்டிஷ் குடியுரிமை கொண்ட எனக்கு இந்தியாவில் வேறு இருப்பிடம் இல்லை என்பதால், இந்த வழக்கில் தீர்ப்பு வரும் வரை, கடந்த 26 ஆண்டுகளாக விஜய்யுடன் வசித்து வந்த நீலாங்கரையில் உள்ள அவர் இல்லத்திலேயே தொடர்ந்து வசிப்பதற்கான உரிமையை வழங்க வேண்டும்.” எனக் கோரிக்கை வைத்திருக்கிறார்.

விஜய் – சங்கீதா

முதற்கட்டமாக நீலாங்கரை இல்லத்தில் தங்குவதற்கு அனுமதி கேட்டபோது விஜய் தரப்பு வழக்கறிஞர்கள் மூலம் அனுமதி மறுக்கப்பட்டு, மிரட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதன் காரணமாகவே சங்கீதா நீதிமன்றத்தை நாடியிருப்பதாக தெரிகிறது. அரசியலில் தடம் பதித்துள்ள நடிகர் விஜய்யின் குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம், திரையுலகிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

TVK: '6 சிலிண்டர்கள் இலவசம், அண்ணன் சீர்; பெண்களுக்கு மாதம் ரூ.2500' – விஜய்யின் தேர்தல் அறிக்கை!

தவெக சார்பில் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் மாமல்லபுரத்தில் மகளிர் தின...

மாவட்டம் Vs வாரிசு; அண்ணா நகருக்குக் குறிவைக்கும் இருவர்! யாரை டிக் அடிக்கப் போகிறார் மாப்பிள்ளை?

உடன்பிறப்புகளிடம் விருப்ப மனுக்களை வாங்கி முடித்திருக்கிறது அறிவாலயம். கருணாநிதி போட்டியிட்ட சென்னையின்...

ஈரோடு: எடப்பாடி பழனிசாமியை வரவேற்க வைத்திருந்த பேனர்கள் – இரவோடு இரவாக கிழித்துச் சென்ற மர்ம நபர்கள்

'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் ' என்ற‌ பெயரில் அ.தி.மு.க பொதுச்...

Christopher Tilak: "உழைக்கும் தொண்டனுக்கும் கிடைத்த வெற்றியாகக் கருதுகிறேன்" – கிறிஸ்டோபர் திலக்

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளரும், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவருமான கிறிஸ்டோபர்...