28
June, 2026

A News 365Times Venture

28
Sunday
June, 2026

A News 365Times Venture

Vande Bharat: `வழக்கமான என்ஜின்களை விட இலகுவாக இருக்கிறது' – ரயில்வே பாதுகாப்பு ஆணைய அறிக்கை

Date:

‘மேக் இன் இந்தியா ‘ திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட, இந்திய ரயில்வேயின் முதன்மை ரயிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், கால்நடைகள் மோதும்போது கூட கடுமையான விபத்துகளுக்கு ஆளாகிறது என ரயில்வே பாதுகாப்பு அறிக்கை தெரிவிக்கிறது. சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் உள்ள ரயில்வே பாதுகாப்பு ஆணையத்தால் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கையில்,“ ரயிலின் வழக்கமான என்ஜின்களை விட இலகுவாக இருக்கிறது.

வந்தே பாரத் – Vande Bharat

அதனால் அதிக வேகத்தில் செல்லும்போது கடுமையாக சேதமடைய வாய்ப்புள்ளது. மணிக்கு 160 கிமீ வேகத்தில் ரயில்களை இயக்கும் திட்டம் முன்னெடுத்துச் செல்லப்படும் நிலையில், மனிதர்கள், கால்நடைகள் குறுக்கிடுவதை தடுக்க வலுவான வேலிகளை நிறுவ வேண்டும்.

பாதிக்கப்படக்கூடிய இடங்களில் ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) பணியாளர்களை நிறுத்துதல், வழக்கமான ரோந்துப் பணிகள் மற்றும் விவசாயிகள் தங்கள் கால்நடைகளை தண்டவாளங்களில் பாதுகாப்பாக நகர்த்த அனுமதிக்கும் வகையில் சுரங்கப்பாதைகள் அமைத்தல் வேண்டும்” எனப் பரிந்துரைக்கிறது.

சு. வெங்கடேசன்

இந்த ரயில்வே ரயில்வே பாதுகாப்பு அறிக்கையைக் குறிப்பிட்ட மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் தன் எக்ஸ் பக்கத்தில், “பசு மாடு முட்டினால் கூட தடம் புரண்டு பெரும் விபத்துக்கு ஆளாகும் அபாயம்! வந்தே பாரத் ரயிலின் முன் கோச் சாதா ரயில்களை விட எடை குறைவாம். ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அறிக்கை. வந்தே பாரத்துக்கு காவிநிறம் அடிப்பதில் காட்டிய ஆர்வத்தை பயணிகளின் பாதுகாப்பில் காட்டுங்கள் அமைச்சரே” ரயில்வே துறை அமைச்சர் அஷ்வின் வைஷ்ணவை டேக் செய்து பதிவிட்டிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

பள்ளி மாணவர்களின் ID கார்டில் சாதி பெயர்? – செங்கோட்டையன் பேசியது என்ன?

நேற்று (ஜூன் 26, 2026) கோபிசெட்டிபாளையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் தமிழ்நாடு வருவாய்த்...

உத்தவ் தாக்கரேவுக்கு மேலும் அதிர்ச்சி: 14 எம்.எல்.ஏ.க்கள் ஷிண்டே கட்சியில் சேர திட்டம்?

2022ம் ஆண்டில் இருந்து சிவசேனாவிற்கு தொடர்ந்து நெருக்கடி வந்து கொண்டே இருக்கிறது....

'தமிழகத்துக்கு சம்பந்தமே இல்லாதவரை எப்படி.?' – டெல்லி பிரதிநிதி நியமனத்துக்கு நயினார் எதிர்ப்பு

தமிழ்நாட்டின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக ஜனநாயகக் திரைப்படத்தின் தயாரிப்பாளர் வெங்கட நாராயணா...

அதிமுக-வில் புதிய பதவி கிடைத்தும் எஸ்.பி.வேலுமணி அப்செட் – காரணம் என்ன?

சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, த.வெ.க. அரசிற்கு ஆதரவு அளித்த எஸ்.பி....