14
July, 2025

A News 365Times Venture

14
Monday
July, 2025

A News 365Times Venture

US: ஹமாஸ் ஆதரவு போராட்டம்; இந்திய மாணவனை வெளியேற்ற ட்ரம்ப் உத்தரவு – தடை விதித்த நீதிமன்றம்!

Date:

`வெளிநாட்டவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டால்’ – ட்ரம்ப் எச்சரிக்கை

அமெரிக்க கல்வித்துறையில் இருக்கும் வெளிநாட்டவர்கள் சட்டத்திற்கு புறம்பான போராட்டங்களில் ஈடுபட்டால், அவர்கள் நாட்டிற்கே அனுப்பப்படுவார்கள் என்று சமீபத்தில் ட்ரம்ப் உத்தரவிட்டிருந்தார்.

அதற்கான பணிகளும் இப்போது அமெரிக்காவில் போய் கொண்டிருக்கிறது.

ட்ரம்பின் சட்டம்…

இந்தியாவைச் சேர்ந்த பதர் கான் சூரி அமெரிக்காவில் உள்ள டாப் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராக பணிப்புரிந்து வருகிறார். இவர் ஹமாஸ்களுக்கு ஆதரவாக செயல்பட்டதால், அவரை கைது செய்துள்ளது அமெரிக்க காவல்துறை. இவரை இந்தியாவிற்கே திரும்ப அனுப்ப உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு:

ட்ரம்ப்பின் இந்த சட்டம் மக்களின் குரலை அடக்குவதாக உள்ளது என சூரியின் வழக்கறிஞர் வாட்திட்டுள்ளார்.

வர்ஜீனியாவின் கிழக்கு மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதி பாட்ரிசியா டோலிவர் கில்ஸ் இந்த வழக்கில், “நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் வரை, சூரியை அமெரிக்காவில் இருந்து வெளியேற்றக்கூடாது” என்று உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்காவின் பொற்கால ஆட்சி இது...
டொனால்டு ட்ரம்ப்

அமெரிக்க சிவில் லிபர்ட்டிஸ் யூனியன் கருத்து:

“ஹமாஸ் ஆதரவு போன்ற போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்வது என்பது மக்களின் குரலை அடக்குவது ஆகும். இதற்காக ஒருவரை அவர்களது வீட்டில் இருந்து பிரிப்பது, நாட்டை விட்டு அனுப்புவதெல்லாம் மிகப்பெரிய தவறு” என்று அமெரிக்க சிவில் லிபர்ட்டிஸ் யூனியன் கூறியுள்ளது. ட்ரம்ப்பின் இந்த உத்தரவுக்கு எதிராக வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளது அமெரிக்க சிவில் லிபர்ட்டிஸ் யூனியன்.

பல்கலைக்கழக கருத்து: 

சூரி குறித்து அவரது பல்கலைக்கழகம், “முறையான விசா மூலம் ‘ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்டுவது’ குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருபவர் சூரி. சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டதாக எங்களுக்கு தெரியவில்லை. அவரது கைது குறித்து எங்களுக்கு எந்த காரணமும் தெரிவிக்கப்படவில்லை” என்று கூறியுள்ளது.

வேட்டை நாய்கள் – Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் – Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

உட்கட்சிக்குள் எழும் எதிர்ப்புகள்; "நீங்கள் காங்கிரஸில் தொடர்வீர்களா?" – சசி தரூரின் பதில்

ஆபரேஷன் சிந்தூர் மூலம் பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு மத்திய அரசு பதிலடி...

RCB Event Stampede : 'ரசிகர்களுக்கு வேகம் தேவைதான், அதேபோல..!' – செல்வப்பெருந்தகை

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியின் வெற்றி கொண்டாட்டத்தில் மக்கள் உயிரிழந்த...

Tatkal: இனி தட்கல் டிக்கெட் எளிதாக கிடைக்கும்; IRCTC-ல் ஆதார் இணைப்பு வருகிறது!

ரயில் டிக்கெட் புக்கிங் நடைமுறைகளை கொஞ்சம் கொஞ்சமாக கடுமையாக்கி வருகிறது ரயில்வே...