குறைந்த வேலைவாய்ப்புகள், நிலையற்ற வேலைவாய்ப்புகள் போன்ற காரணங்களால், டெலிவரி பாய் போன்ற கிக் வேலைகளை நோக்கி இளைஞர்கள் அதிகம் நகர்ந்து வருகின்றனர்.
நிச்சயமான வேலை, நிரந்தர வருமானம், உரிய அங்கீகாரம், நிரந்தர வேலைகளுக்கு இருக்கும் சலுகைகள் போன்ற எதுவும் இல்லாததால் கிக் வேலை பார்ப்பவர்களுக்குக் கண்ணுக்குத் தெரியாத பல சிக்கல் இருந்துகொண்டே வருகின்றன.
அவர்களுக்கு இன்றைய பட்ஜெட்டில் அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. அதன்படி, கிக் வேலை பார்க்கும் பணியாளர்களுக்கு e-sharm வலைத்தளம் மூலம் பதிவு செய்யவும், அடையாள அட்டை வழங்கவும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், பிரதம மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனாவின் கீழ், மருத்துவ உதவி வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் கிட்டதட்ட 1 கோடி கிக் தொழிலாளர்கள் பயனடைய உள்ளனர்.
இது நிச்சயம் கிக் தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு ஆகும். இதன் மூலம், கிக் தொழிலாளர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும். அதுவும் ஒரு துறையாகக் கணக்கிடப்படுவதோடு, அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளைப் பேசக்கூடிய வாய்ப்பும் ஏற்படும்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY