16
March, 2026

A News 365Times Venture

16
Monday
March, 2026

A News 365Times Venture

TVK Vijay: மீண்டும் துளிர்க்கிறதா தவெக, நாதக நட்பு? – பரவும் தகவலும் பின்னணியும்!

Date:

தமிழக வெற்றிக் கழக தரப்பு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்திக்க விரும்புவதாக தூது அனுப்பியிருப்பதாக வெளிவரும் தகவல்கள் தமிழக அரசியலில் அனலை கிளப்பியிருக்கிறது. இதுகுறித்த விசாரணையில் இறங்கினோம்.

நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தை கடந்தாண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய சமயத்தில், `”விஜய் அரசியல் கட்சி தொடங்குவது ஆரோக்கியமானதாக இருக்கும். தமிழ்நாட்டின் உரிமைக்காக அண்ணன் மட்டும் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார், அவருக்கு உறுதுணையாக நிற்போம் என விஜய் நினைத்திருக்கலாம்” என வாயார வாழ்த்தி விஜய்யை வரவேற்றார்.

தவெக – விஜய்

விஜய்யும் சீமானும் அடிக்கடி சந்தித்து ஆலோசிப்பதாக தகவல்கள் பரவியபோது, “அண்ணனும், தம்பியும் சந்திப்பது வழக்கம். அப்படித்தான் நானும் விஜய்யும் சந்தித்துக் கொள்கிறோம். இப்ப நாட்டுல பிரச்னை அண்ணனும் தம்பியும் சேர்ந்துவிடக்கூடாது என்பதுதானே…” எனப் பேசிவந்தார். பின்னர், த.வெ.க-வின் முதல் மாநில மாநாட்டில் `திராவிடமும் தமிழ்தேசியமும் இம்மண்ணின் கண்கள் எனவும் பெரியாரை கொள்கைத் தலைவராக பிரகடனப்படுத்திய பிறகும் சீமான் – விஜய் உறவில் விரிசல் ஏற்படத் தொடங்கின,

‘உன்னுடையது கொள்கையல்ல, கூமுட்டை… அதுவும் அழுகின கூமுட்டை’, ‘ஒன்னு சாலைக்கு அந்தப்பக்கம் நில்லு, இல்லை இந்தப் பக்கம் நில்லு. நடுவுல நின்னா லாரி அடிச்சு செத்துருவ’ என ஏக வசனத்தின் விஜய்யை சாடினார் சீமான். “அண்ணன் தம்பி வேற, கொள்கை வேற… கொள்கைனு வந்துவிட்டால் பகைதான்” என விஜய்க்கு எதிராக தீவிரமாகவே களமிறங்கியது நாம் தமிழர் கட்சி.

சீமான்

சீமான் தரப்பு கடுமையாக விமர்சித்ததை த.வெ.க-வும் வேடிக்கைப் பார்க்கவில்லை, தேர்தல் வியூக வகுப்பாளரை கொண்டு அரசியல் செய்வதை பணக்கொழுப்பு என சீமான் விமர்சித்தபோது “ஒவ்வொரு தேர்தலிலும் கட்டுத்தொகையை இழப்பதையே தேர்தல் வியூகமாகக் கொண்ட அண்ணன் சீமான் இன்னும் எத்தனை ஆண்டுகள் “வென்றால் மகிழ்ச்சி,.தோற்றால் பயிற்சி” என்று நாம் தமிழர் உறவுகளை உசுப்பேத்திக் கொண்டே இருக்கப் போகிறாரோ தெரியவில்லை?

திரள் நிதி வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ள அண்ணன் சீமானுக்கு திறமையாளர்களின் ஆலோசனைகளை பெறுவது தவறாக தெரிவது ஆச்சரியமன்று. நாங்கள் சட்டமன்றத்தில் பேசுவதற்காக அரசியல் செய்கிறோம், நீங்கள் பட்டிமன்றத்தில் பேசுவது தான் அரசியல் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள்” என கடுமையாக எதிர்வினையாற்றியது.

இதுபோன்ற வார்த்தைப் போருக்கு மத்தியில் விஜய் தரப்பு, சீமானை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாக ஒரு தகவல் கசிகின்றது. இதுகுறித்து விரிவாகப் பேசிய விவரமறிந்தவர்கள், “நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்திக்க த.வெ.க-வின் வியூக வகுப்பு குழுவின் முக்கிய புள்ளிகள் அப்பாயிண்மெண்ட் கேட்டிருப்பதற்கு பின்னால் ஆளும்கட்சிக்கு எதிரான கூட்டணி வியூகமாகவும் இருக்கலாம். அதேசமயம், அரசியல், கொள்கை எதிரிகளை தாண்டி மற்ற கட்சிகளை நட்பு சக்திகளாக அணுக த.வெ.க முயற்சிக்கிறது. அதற்கான முன்னெடுப்பாகவும் இருக்கும்” என்றார்கள்.

சீமான், விஜய்

இதைமறுத்தும் பேசும் நா.த.க நிர்வாகிகள் சிலர் “நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுவதாக ஏற்கனவே அறிவித்துவிட்டது. . ஒருவேளை கூட்டணி அரசியலை கையிலெடுத்தால் ‘தமிழ்த்தேசிய கருத்தியலையும் அண்ணன் சீமானை முதல்வர் வேட்பாளராகவும் ஏற்போருடன் கூட்டணி என்ற எங்களது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இருக்காது. கொள்கை முரண் கொண்டவர்கள் எங்கள் நட்பு சக்தியாக இருக்க முடியாதே” என்றனர்.

வேட்டை நாய்கள் – Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் – Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

நாகர்கோவிலை வட்டமிடும் `பொன்னார்' – குமரி மாவட்டத்தின் 6 தொகுதிகள் கள நிலவரம்! முந்துவது யார்?

முந்துவது யார்?தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தற்போதைய நிலவரப்படி, யார் களத்தில் முந்துகிறார்கள்...

தொகுதி மாறி மம்தாவுக்கு `குறி'; எதிர்த்து களமிறங்கும் சுவேந்து அதிகாரி – பரபர மே.வங்க தேர்தல் களம்!

மேற்கு வங்க சட்டமன்றத்திற்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடக்கவிருக்கிறது. கடந்த முறை...

`மயிலாடுதுறையில் மல்லுக்கட்டும் திமுக, அதிமுக மா.செ.க்கள்; தவெக ஆதரவு?' மாவட்டத்தில் முந்துவது யார்?

முந்துவது யார்?தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தற்போதைய நிலவரப்படி, யார் களத்தில் முந்துகிறார்கள்...