10
February, 2026

A News 365Times Venture

10
Tuesday
February, 2026

A News 365Times Venture

TVK: “100-க்கும் மேற்பட்ட ரெளடிகள் அராஜகத் தாக்குதல்" – தவெக தலைவர் விஜய் காட்டமான பதிவு!

Date:

தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிட உள்ளது. இந்த தேர்தலில் த.வெ.க சார்பில் விஜய் உள்பட டாப் தலைவர்கள் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள தொகுதிகளில் போட்டியிட ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், சென்னை பாரிமுனைப் பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்ட தவெக ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் தன் எக்ஸ் பக்கத்தில், “சென்னை, பாரிமுனைப் பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மீது, ஆளும் கட்சியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ரவுடிகள் அராஜகத் தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது.

TVK Vijay

இந்தத் தாக்குதலில், நான்கு மாதக் கர்ப்பிணி உள்பட நிர்வாகிகள் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர், அவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் நான்கு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். படுகாயம் அடைந்த கழகத் தோழர்கள் ஆறு பேரும் விரைவில் குணமடைய விழைகிறேன்.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு மக்களிடையே பெருகி வரும் செல்வாக்கைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஆளும் கட்சியினர், மக்களிடையே நன்மதிப்பைப் பெற்றுள்ள நம் கழகத் தோழர்கள் மீது இவ்வாறான வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.

இது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயலாகும். திமுகவின் தோல்வி பயத்தையே இது காட்டுகிறது. இந்த அராஜகத் தாக்குதலில் ஈடுபட்ட ஆளும் கட்சிக்கு, வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டப் போவது நிச்சயம்!” எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

மின்சார வாரியம் முதல் ஆவின் வரை; நஷ்டத்தின் பின்னால் இருக்கும் அரசியல்; திமுக, அதிமுக சொல்வது என்ன?

மத்திய அரசின் 16-வது நிதிக்குழு, நாடு முழுவதும் மாநில பொதுத்துறை நிறுவனங்கள்...

`எங்களிடம் முதலிடத்தில் இருந்தார்; அங்கோ 4-வது இடம்' – செங்கோட்டையன் குறித்து திண்டுக்கல் சீனிவாசன்

திண்டுக்கல்லில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் வரும் 13ஆம் தேதி...

'அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட் ஆர்டர்!' – அண்ணாமலைக்கு புதிய பதவி; அப்செட்டில் நயினார் நாகேந்திரன்

சமீபத்தில், 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் 72 சுற்றுப்பயண பொறுப்பாளர்கள் பா.ஜ.க-வில் நியமிக்கப்பட்டனர்....

திருச்செந்தூர்: `ஜனநாயகன்’ படம் வெளிவந்தால் உங்கள் நாற்காலி காலி' என்ன சொல்கிறார் நாஞ்சில் சம்பத்?

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க...