10
April, 2026

A News 365Times Venture

10
Friday
April, 2026

A News 365Times Venture

TVK: “நானா துரோகி..? ரூ.5000 கோடி மதிப்பில் 2 தொழிற்சாலை கட்டிவருகிறார் எடப்பாடி!" – செங்கோட்டையன்

Date:

விஜய் ஆதரவுடன் முதல்வராகி 5000 கோடி ரூபாய் சம்பாதிக்கத் திட்டமிட்டார் எடப்பாடி பழனிசாமி என செங்கோட்டையன் விமர்சித்திருக்கிறார்.

ஈரோடு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட த.வெ.க. தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், “நடிகர் விஜய்யின் ஆதரவுடன் மீண்டும் முதலமைச்சராகி, சுமார் ரூ.5,000 கோடி சம்பாதிக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டார். அந்த முயற்சியை நான் முறியடித்ததால் என் மீது அவருக்கு கோபம் உள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் பதவியையும், கட்சியின் பொதுச்செயலாளர் பதவியையும் விட்டுக் கொடுத்ததே நான்தான். எனக்குப் பின் கட்சிக்கு வந்து பதவிகளை அனுபவித்துவிட்டு, உழைத்தவர்களையே இப்போது நீக்கி வருகிறார்.

அ.தி.மு.க தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்

எனது வேட்புமனுவைத் தள்ளுபடி செய்யச் சொல்லும் அளவுக்கு அவர் இறங்கிச் சென்றிருப்பது, அவரது தோல்வி பயத்தைக் காட்டுகிறது. ஏற்கெனவே 10 முறை தோல்வியைக் கண்ட பழனிசாமி என்பார்கள் அவரை. எடப்பாடி பழனிசாமி நாட்டை ஒரு கம்பெனி போல நடத்தப் பார்க்கிறார். அவரின் மகனும், மச்சானும் பதவிக்கு வரத் துடிக்கிறார்கள். இது மக்கள் நலனுக்கான இயக்கம் அல்ல, ஒரு குடும்ப கம்பெனி.

பவானி ஆற்றின் அருகே ரூ.2,000 கோடியிலும், மேட்டூர் அருகே ரூ.3,000 கோடியிலும் ஃபேக்டரி கட்டி வருகிறார். இதனால் ஆற்றுத் தண்ணீர் மாசடைந்து விவசாயிகளும் மக்களும் பாதிக்கப்படப் போகிறார்கள். முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுத்த எனக்கா துரோகி பட்டம்? அவருக்கு அரசியல் களம் தெரியவில்லை. மக்கள் சக்தி இன்று விசில் சின்னத்திற்குப் பின்னால் அணிதிரண்டு நிற்கிறது.” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"மு.க.ஸ்டாலினின் கைக்கூலி ஜி.கே.மணி; உதயநிதியின் கைக்கூலி தமிழ்குமரன்…!" – அன்புமணி ஆவேசம்

"தமிழ்குமரன் திமுகவில் சீட் பெறத்தான் ஒரு மாதத்திற்கு முன்பே முடிவு செய்திருந்தார்...."...

`என் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் கல்லுப்பட்டி ஆலமர மேடை' – நெகிழ்ந்த தங்கம் தென்னரசு

``என் மனதில் என்றும் நீங்காத இடத்தைப் பிடித்திருக்கும் மேடை இந்தக் கல்லுப்பட்டி...

`எப்படி ஜெயிக்குறாங்கனு பார்த்துடுறேன்!' – தலைநகர் உள்ளடி டு சீட்டுக்கு 2 ஸ்வீட் பாக்ஸ்! | கழுகார்

"வேலை பார்ப்பவர்களுக்கே மேயர் பதவி!"தஞ்சாவூர் தொகுதி தி.மு.க வேட்பாளராக, சிட்டிங் மேயர்...

'ஸ்டாலின் கொரோனால போயிடுவாருன்னு சொன்னேனா?' – எடப்பாடி பழனிசாமி விளக்கம்

தேர்தல் பிரசாரத்தின் போது முதலமைச்சர் ஸ்டாலினை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி...