16
March, 2026

A News 365Times Venture

16
Monday
March, 2026

A News 365Times Venture

Trump: "ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க சீனா உதவ வேண்டும்" – ட்ரம்ப்பின் நிபந்தனையும் சீனாவின் பதிலும்

Date:

அமெரிக்கா – ஈரான் போரினால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை விண்ணை முட்டியுள்ள நிலையில், “ஈரானால் முடங்கியுள்ள ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் போக்குவரத்தை மீண்டும் சீரமைக்க சீனா உதவ வேண்டும்” என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களால் கடந்த இரண்டு வாரங்களில் உலக அரசியல் சூழல் பரபரப்பாக மாறியுள்ளது. அமெரிக்காவில் இடைத்தேர்தல் நெருங்கும் வேளையில், பெட்ரோல் விலை உயர்வு ட்ரம்ப் நிர்வாகத்திற்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

தொடக்கத்தில் அமெரிக்கப் போர் கப்பல்கள் மட்டுமே பாதுகாப்பு அளிக்கும் என்று கூறிய ட்ரம்ப், தற்போது சுமார் ஏழு நாடுகளிடம் ராணுவ உதவி கோரியுள்ளார்.

ட்ரம்ப்

ஒருபுறம் ட்ரம்ப் இத்தகைய முயற்சிகளை முன்னெடுக்கும் நிலையில், மறுபுறம் பாரிஸ் நகரில் அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஸ்காட் பெசென்ட் மற்றும் சீன துணைப் பிரதமர் ஹி லிஃபெங் ஆகியோர் வர்த்தகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

ட்ரம்ப்பின் சீனப் பயணத்திற்கு முன்கூட்டியே ஒரு சுமூகமான சூழலை உருவாக்கவே இந்தப் பேச்சுவார்த்தை திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ‘பைனான்சியல் டைம்ஸ்’ இதழுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அளித்திருந்த பேட்டியில், “மத்திய கிழக்கிலிருந்து வரும் கச்சா எண்ணெய்யைச் சீனா பெரிதும் சார்ந்துள்ளது. எனவே, ஹார்முஸ் ஜலசந்தியைத் திறந்து எண்ணெய் கப்பல்களின் போக்குவரத்தை உறுதி செய்ய நாங்கள் உருவாக்கும் புதிய கூட்டணியில் சீனா இணைய வேண்டும்.

எனது சீனப் பயணத்திற்கு முன்பாகவே அவர்களின் நிலைப்பாட்டை நாங்கள் அறிய விரும்புகிறோம். ஒருவேளை அவர்கள் ஒத்துழைக்காவிட்டால், எனது பயணம் தள்ளிவைக்கப்படலாம்.

அமெரிக்கா Vs சீனா
அமெரிக்கா Vs சீனா

ட்ரம்ப்பின் இந்தக் கோரிக்கை குறித்து அமெரிக்காவிலுள்ள சீனத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர், “ஹார்முஸ் ஜலசந்தி சர்வதேச வர்த்தகத்திற்கு மிக முக்கியமானது. இப்பகுதியை அமைதியாக வைத்திருப்பது சர்வதேச சமூகத்தின் கூட்டுப் பொறுப்பு. அமைதியை நிலைநாட்ட தொடர்புடைய நாடுகளுடன் சீனா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும்” எனப் பொதுவாகக் குறிப்பிட்டார்.

ஏற்கனவே வர்த்தகப் போரினால் அமெரிக்கா – சீனா இடையே சுங்க வரி மோதல் நிலவி வருகிறது. 2026-ம் ஆண்டிற்கான தனது பொருளாதார வளர்ச்சி இலக்கைச் சீனா 4.5% – 5% ஆகக் குறைத்துள்ள நிலையில், எண்ணெய் விநியோகத் தடை நீடித்தால் அது சீனாவிற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`ரீல்ஸ் போடும் முதல்வருக்கு வேடநத்தத்தின் கதறல் கேட்டிருக்க வேண்டாமா?' – குமுறும் கிராமத்தினர்!

கடந்த 10 ஆம் தேதி மாணவி மர்ம முறையில் கொல்லப்பட்ட அதிர்ச்சியிலும்...

TVK : 'மாமல்லபுரத்தில் இஃப்தார் விருந்தில் கலந்துகொள்ளும் விஜய்!' – தவெக அப்டேட்

தவெக சார்பில் அக்கட்சியின் தலைவர் விஜய் நாளை மறுநாள் நடக்கவிருக்கும் இஃப்தார்...

தேனி மாவட்டத்தில் 5 வாக்காளர்கள் மட்டுமே உள்ள வாக்குச்சாவடி! – காரணம் என்ன?

தமிழ்நாடு, கேரளா, அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்கள் மற்றும்...