15
March, 2026

A News 365Times Venture

15
Sunday
March, 2026

A News 365Times Venture

Trump: "பொழுதுபோக்கிற்காக மீண்டும் தாக்குவோம்" – ஈரான் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ட்ரம்ப்

Date:

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதல் நடத்திய நிலையில், அதற்கு பதில் தாக்குதல் தொடுத்துவருகிறது ஈரான்.

கடந்த பிப்ரவரி 28 முதல் தொடங்கி நடந்து வரும் இந்த வான்வழிப் போரில் இதுவரை 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானின் இஸ்ஃபஹான் நகரில் உள்ள தொழிற்சாலை ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 15 பேர் பலியாகினர்.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகள் மத்திய கிழக்கில் பெரும் பதற்றமான சூழலை ஏற்படுத்தியிருக்கிறது.

ட்ரம்ப்

இந்த நிலையில் அதிபர் ட்ரம்ப் NBC செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “ஈரானின் கர்க் தீவில் (Kharg Island) உள்ள பெரும்பாலான ராணுவ இலக்குகள் ஏற்கனவே அமெரிக்கத் தாக்குதலில் நிர்மூலமாக்கப்பட்டுவிட்டன.

தேவைப்பட்டால் பொழுதுபோக்கிற்காக இன்னும் சில முறை அங்கு தாக்குதல் நடத்துவோம் ஈரான் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்கிறது. ஆனால் அவர்கள் முன்வைக்கும் நிபந்தனைகள் ஏற்புடையதாக இல்லை.

ஈரானுடனான இந்த மோதலால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. எனவே, உலகின் முக்கிய எண்ணெய் வழித்தடமான ஹார்முஸ் நீரிணையின் பாதுகாப்பை உறுதி செய்ய சீனா, பிரான்ஸ், ஜப்பான், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தங்கள் போர்க்கப்பல்களை அனுப்ப வேண்டும். அந்தப் பகுதியின் பாதுகாப்பிற்கு அமெரிக்கா முழு ஒத்துழைப்பு வழங்கும்” எனக் குறிப்பிட்டார்.

ஈரான் போர்
ஈரான் போர்

இதற்கு பதிலடி கொடுத்திருக்கும் ஈரான், “அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்கள் நிறுத்தப்படும் வரை போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பில்லை. துபாய், அபுதாபி மற்றும் புஜைரா (Fujairah) போன்ற ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய துறைமுகப் பகுதிகளிலிருந்து பொதுமக்கள் வெளியேறுமாறு எச்சரிக்கிறோம்” எனத் தெரிவித்திருக்கிறது.

இதற்கிடையில், ஈரானிலிருந்து அமீரகத்தை நோக்கி ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதால், அங்குள்ள முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் உலகளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு பெருமளவில் ஏற்பட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'பேராவூரணி பேரூராட்சியில் ஊழல்?' – திமுக பெண் சேர்மன், கணவர் உட்பட 7 பேர் மீது விஜிலென்ஸ் FIR

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பேராவூரணி பேரூராட்சி திமுக சேர்மன்...

"உயிருடன் இருந்தால் விடமாட்டோம்" – நெதன்யாகுவுக்கு ஈரான் இராணுவம் நேரடி கொலை மிரட்டல்!

கடந்த பிப்ரவரி 28 அன்று, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான்...

''காங்கிரஸுக்குக் கூடுதல் தொகுதிகள் ஒதுக்கியதை தோழமைக்கட்சிகள் விவாதமாக்காதீர்கள்"- செல்வப்பெருந்தகை

இன்று சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது....

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல்: "தேர்தல் தேதி இன்று மாலை வெளியாகும்" – தேர்தல் ஆணையம்

தமிழகம், கேரளா, அசாம், மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி ஆகிய 5...