15
March, 2025

A News 365Times Venture

15
Saturday
March, 2025

A News 365Times Venture

TN Budget 2025: `நிறைய புதிய திட்டங்களை அறிவிச்சுருக்காங்க, ஆனா…' – எடப்பாடி பழனிசாமி சொல்வதென்ன?

Date:

தமிழ்நாட்டின் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

பட்ஜெட் குறித்து அரசியல் தலைவர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் 2025 -26 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் குறித்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். “பட்ஜெட்டில் நிறையப் புதியத் திட்டங்களை அறிவித்திருக்கிறார்கள். ஆனால் இந்தத் திட்டத்திற்கு தேவையான நிதி எங்கிருந்து கிடைக்கும் என்று தெரியவில்லை. 2021 சட்ட மன்றத் தேர்தலின்போது திமுக 525 அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார்கள். அதில் 15 சதவிகித அறிவிப்புகள் கூட நிறைவேற்றப்படவில்லை. ஆனால் ஸ்டாலின் அவர்கள் கடந்த 4 ஆண்டுகளில் 95 சதவிகிதப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகப் பொய்யானத் தகவலை வெளியிட்டிருக்கிறார்.

அதில் சிலவற்றை குறிப்பிடுகிறேன். நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தேர்தல் நேரத்தில் சொல்லி இருந்தார்கள். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுதான் திமுக அறிவிப்பின் லட்சணம். கல்வி கடன் ரத்து, நூறு நாள் வேலைத்திட்டம் 150 நாளாக மாற்றுதல் அவர்களின் ஊதிய உயர்வு, எரிவாயு சிலிண்டருக்கு மானியம், பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை, ரேஷன் கடைகளில் 1 கிலோ கூடுதல் சர்க்கரை என பல விஷயங்களைத் தேர்தல் நேரத்தில் அறிவித்திருந்தார்கள். ஆனால் பட்ஜெட்டில் இதுதொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

ஸ்டாலின் எப்போதும் ஒரு திட்டத்தை அறிவிப்பார். அதற்கு குழு ஒன்றை அறிவிப்பார். ஆனால் அந்த குழுவின் நடவடிக்கைப் பற்றி எதுவும் அறிவிக்க மாட்டார்கள். மொத்தத்தில் முதல்வரும், துணை முதல்வரும் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ள முனைப்பு காட்டுகிறார்கள். ஆனால் மக்களின் பிரச்னையைக் கண்டுகொள்வதில்லை. இன்றைய ஆட்சி வெறும் விளம்பரத்தில்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. 2026 தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காக அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார்.

கடந்த 4 ஆண்டுகளில் 50,000 அரசுப்பணிகள் நிரப்பட்டன. ஓராண்டில் 40,000 அரசுப் பணியிடங்களை நிரப்புவதாகச் சொல்லி இருகிறார்கள். அப்படி நிரப்ப முடியுமா? தமிழ்நாடு கடனில் தத்தளிக்கிறது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு நிதி இல்லை. நிர்வாக திறமையற்ற ஆட்சி நடக்கிறது” என்று எடப்பாடி திமுகவை சாடி இருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

“இருமொழிக் கொள்கையை ஆதரிக்கும் கட்சிதான் தேர்தலில் வெற்றிபெறும்'' – அமைச்சர் KKSSR சொல்வதென்ன?

விருதுநகர் மாவட்டம், சாத்தூர், அருப்புக்கோட்டை மற்றும் வெம்பக்கோட்டை ஆகிய வட்டாரங்களில் செயல்படுத்தப்பட்டு...

வெளிநாட்டிலிருந்து நிவாரண நிதி: ஜவாஹிருல்லாவுக்கு ஓராண்டு சிறை தண்டனை – உறுதி செய்த உயர் நீதிமன்றம்

வெளிநாட்டிலிருந்து அனுமதியின்றி நிவாரண நிதி பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் மனிதநேய மக்கள்...

தொகுதி மறுவரையறை: `தெற்கு தேய்கிறது; வடக்கு மேய்கிறது’ – ஆதவன் தீட்சண்யா | களம் பகுதி 4

எந்த ஒரு விவகாரத்துக்கும் பல முகங்கள் இருக்கும். பல்வேறு நபர்களின் பார்வைகள்...

“புதிய பொறுப்பாளரை ஏற்க முடியாது'' – கொதிக்கும் புதுக்கோட்டை மாநகர திமுகவினர்… பின்னணி என்ன?

புதுக்கோட்டை மாநகர தி.மு.க செயலாளராக இருந்த அமைச்சர் ஆ.செந்தில் கடந்த சில...