15
March, 2025

A News 365Times Venture

15
Saturday
March, 2025

A News 365Times Venture

Thirumavalavan : 'எந்த அரசியல் கணக்கும் இல்லை!' – ஆதவ் சந்திப்பும் திருமா விளக்கமும்!

Date:

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் ஆதவ் அர்ஜூனா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். சந்திப்புக்குப் பிறகு, ‘இதில் எந்த அரசியல் கணக்கும் இல்லை, முடிச்சும் இல்லை!’ என திருமாவளவன் பத்திரிகையாளர்களிடம் பேசியிருக்கிறார்.

ஆதவ்

திருமாவளவன் பேசுகையில், ‘ஆதவ், தமிழக அரசியலில் புதிய அணுகுமுறையை தொடங்கி வைத்திருக்கிறார். ஒரு கட்சியிலிருந்து விலகினாலோ விலக்கி வைத்தாலோ அதை பகையாக கருதுகிற பாரம்பரியம்தான் இங்கே நீண்டகாலமாக இருந்து வருகிறது. ஆனால், ஆதவ் அர்ஜூன் கட்சியை விட்டு வெளியேறுகிற சூழல் ஏற்பட்ட போது கூட அதை பகையாக கருதவில்லை. வலிகள் இருந்தாலும் அதை எதிராக நிறுத்தவில்லை. இன்னொரு கட்சியில் இணைந்து பொதுச்செயலாளர் பதவியை பெற்றாலும் உங்களுடைய வாழ்த்து தேவை என அவர் வந்திருப்பது தமிழக அரசியல் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.

களத்தில் எவ்வளவு முரண்பட்டாலும் அதை பகையாக நினைக்கக்கூடாது. சில பேர் கட்சியை விட்டு வெளியேறியவுடன் தலைமையின் மீதான பிம்பத்தை சிதைக்க நினைப்பார்கள். ஆதவ் அப்படியெல்லாம் செய்யவில்லை. பெரியார், அம்பேத்கர் கொள்கைகளை பேசக்கூடிய இயக்கமாக தவெக இருக்கிறது. விசிக பேசும் அதே கொள்கைகளை தவெகவும் பேசுகிறது.

திருமா

இதனால் நான் மனப்பூர்வமாக தவெகவில் இணைந்திருக்கிறேன் எனும் விளக்கத்தை ஆதவ் தந்தார். பெரியாருக்கு எதிரான விமர்சனங்கள் வைக்கப்பட்டு கொண்டிருக்கும் சூழலில் தவெக சார்பில் பெரியாரின் கொள்கைகளைத்தான் உயர்த்திப் பிடிப்போம் என ஆதவ் சொன்னார். எங்களுக்கு எந்த அரசியல் கணக்கும் இல்லை. முடிச்சும் இல்லை.’ என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

PM SHRI: பி.எம் ஸ்ரீ திட்டம் என்றால் என்ன? மத்திய Vs மாநில அரசு… அரசியல் செய்வது யார்? | Explainer

Tபி.எம் ஸ்ரீ திட்டம் தொடர்பாக மத்திய பாஜக அரசுக்கும், மாநில திமுக...

Russia – Ukraine War: “போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தான்; ஆனால்..'' – புதின் கேட்கும் 3 கேள்விகள்!

இந்த வாரம், சவுதி அரேபியாவில் நடந்த அமெரிக்க - உக்ரைன் பேச்சுவார்த்தையில்...

Pawan Kalyan: `ஏன் தமிழ் படங்கள் இந்தியில் டப் செய்கிறார்கள்?' – சர்ச்சையைக் கிளப்பும் பவன் கல்யாண்

தமிழகத்தில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தி திணிப்பு விவகாரம் குறித்து...