ரயில் டிக்கெட் புக்கிங் நடைமுறைகளை கொஞ்சம் கொஞ்சமாக கடுமையாக்கி வருகிறது ரயில்வே துறை.
கடந்த சில நாள்களாகவே, தட்கல் டிக்கெட்டையொட்டி, ஏஜென்டுகளின் கையில் தான் தட்கல் டிக்கெட் புக்கிங் உள்ளது… மக்களால் எளிதாக தட்கல் டிக்கெட் எடுக்க முடிவதில்லை என்று ஏகப்பட்ட சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருந்தன.
இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தட்கல் டிக்கெட் எடுப்பதில் புதிய நடைமுறையை அமல்படுத்த உள்ளது ரயில்வே துறை.
என்ன?
இனி, ஆதார் தட்கல் டிக்கெட்டோடு இணைக்கப்பட உள்ளது. அதாவது ஆதாரை IRCTC இணையதளத்தோடு இணைக்க வேண்டும். இதன் மூலம், தட்கல் டிக்கெட் புக் செய்ய கொடுக்கப்படும் நேரத்தில் முதல் 10 நிமிடங்கள் ஆதாரை தனது ஐ.ஆர்.சி.டி.சி கணக்கோடு இணைத்தவர்களுக்கு தான் முன்னுரிமை கொடுக்கப்படும்.
ஐ.ஆர்.சி.டி.சியில் பதிவு செய்திருக்கும் ஏஜெண்டுகளுக்கு கூட, அந்த சமயத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்ய முடியாது.
எப்போது?
இந்த மாத இறுதியில் இந்த நடைமுறை அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய, பாரதிய ரயில்வே விரைவில் இ-ஆதார் அங்கீகாரத்தைப் பயன்படுத்தத் தொடங்கும். இது உண்மையான பயனர்கள் தேவைப்படும்போது டிக்கெட்டுகளைப் பெற உதவும்” என்று தெரிவித்துள்ளார்.
Bharatiya Railways will soon start using e-Aadhaar authentication to book Tatkal tickets.
This will help genuine users get confirmed tickets during need.— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) June 4, 2025