25
March, 2026

A News 365Times Venture

25
Wednesday
March, 2026

A News 365Times Venture

Sindoor: "கேமராக்கள் முன் மட்டும் உங்கள் இரத்தம் கொதிக்கிறதே ஏன்?" – மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி

Date:

ராஜஸ்தான் மாநிலத்தில் முடிவுற்ற ரூ.26,000 கோடி மதிப்பிலான திட்டங்களை நேற்று (மே 22) பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.

அதைத் தொடர்ந்து அவர் ஆற்றிய உரையில், “இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களை ஏற்பாடு செய்து ஆதரித்த பாகிஸ்தான், அதற்காக அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பதை ஆபரேஷன் சிந்தூர் தெளிவுபடுத்தியிருக்கிறது.

என் நரம்புகளில் இரத்தம் ஓடவில்லை… சூடான சிந்தூர் (குங்குமம்) ஓடுகிறது” என உரையாற்றினார்.

மோடி – ராகுல் காந்தி

இதை தன் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்த நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, `”வெறுமனே பேசிக்கொண்டே இருப்பதை நிறுத்துங்கள். பயங்கரவாதம் குறித்த பாகிஸ்தானின் அறிக்கையை நீங்கள் ஏன் நம்பினீர்கள் என்று சொல்லுங்கள்?

ட்ரம்ப் இட்ட கட்டளைக்குத் தலைவணங்கி இந்தியாவின் நலன்களை ஏன் தியாகம் செய்தீர்கள்? கேமராக்கள் முன் மட்டும் உங்கள் இரத்தம் கொதிக்கிறதே ஏன்?

இந்தியாவின் கண்ணியத்தைக் காப்பதில் நீங்கள் சமரசம் செய்துவிட்டீர்கள்” என்று விமர்சித்திருக்கிறார்.

இதற்குப் பதிலளித்திருக்கும் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, “பிரதமர் மோடியின் உரையை நீங்கள் தாமதமாகப் பார்த்ததாகத் தெரிகிறது. அந்த உரையைக் கேட்க இன்னும் 10 நாள் கூட தள்ளிப்போயிருக்கலாம்.

அதுவும் நல்லதுதான். காங்கிரஸ் பல ஆண்டுகளாக பாகிஸ்தானுக்குக் காதல் கடிதம் அனுப்பியது போல மோடி அரசு செயல்படாது.

நாங்கள் இதுவரை இல்லாத அளவுக்கு வலுவான பதிலடியை அளித்துள்ளோம்” எனக் குறிப்பிட்டார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

கன்னியாகுமரி: மாவட்டத்தில் ஒற்றைத் தொகுதியில் ஒதுங்கிய அதிமுக; 5 தொகுதிகளில் தாமரைச் சின்னம் போட்டி!

கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் 6 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. அதில் கன்னியாகுமரியில்...

"டார்ச் சின்னத்தில் போட்டியிட ஸ்டாலின் அனுமதிக்க வேண்டும்" – கமல்ஹாசனுக்காக குரல் கொடுக்கும் திருமா

வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை என்று...

` 13 திமுக அமைச்சர்கள், சபாநாயகர் தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகள்' – எடப்பாடியின் அடடே மூவ்!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அ.தி.மு.க பொதுச் செயலாளர்...

'மூப்பனாரின் ஆன்மா மன்னிக்காது.!' – பாஜகவிடம் கட்சியை அடகு வைத்த ஜி.கே.வாசன்?

என்.டி.ஏ கூட்டணியில் 5 தொகுதிகளை வாங்கிக் கொண்டு பாஜக-வின் தாமரை சின்னத்தில்...