இளங்கோவன் எக்ஸ்பிளைன்சில்,
டாஸ்மாக் துறையில் ரூ 1000/- கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்திருக்கிறதாக ஆளும் திமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறது அமலாக்கத்துறை ரிப்போர்ட். அதில் எட்டு வகையில் முறைகேடு நடந்ததாக பட்டியலிட்டுள்ளனர். அதைக் கடந்து, நடந்த சோதனைகளில் முக்கியமான சில டைரிகள் சிக்கியுள்ளன. அதில் இன்னும் வெவ்வேறு வடிவங்களில், எப்படியெல்லாம் கமிஷன் விளையாடியுள்ளன என்ற குறிப்புகளும் கிடைத்துள்ளன. எனவே இதை வைத்து அடுத்தடுத்த அட்டாக்கை ஏவத்திட்டமிட்டிருக்கும் அமலாக்கத்துறை. ஏற்கனவே செந்தில் பாலாஜி பிணையை, ரத்து செய்ய சொல்லி உச்சநீதிமன்றத்தை நாடியது அமலாக்கத்துறை. இந்த நிலையில் இந்த ஆக்சன்கள், செந்தில் பாலாஜிக்கு கூடுதல் தலைவலியை கொடுக்க உள்ளன என்கிறார்கள் அமலாக்கத்துறை வட்டாரத்தினர். எடப்பாடி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர், இதை வைத்து களமாடத் தொடங்கியுள்ளனர். இந்த முறைகேடு புகார் எல்லாவற்றையும் ஆணித்தரமாக மறுத்துள்ளார் செந்தில் பாலாஜி. இருந்தாலும், நிமிடத்திற்கு நிமிடம் தொடரும் திகில்…
முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும்.