3
July, 2025

A News 365Times Venture

3
Thursday
July, 2025

A News 365Times Venture

Seeman: "பெரிய கட்சிகள் கூட்டணிக்கு அழைத்தபோது…" – தவெக கூட்டணி குறித்த கேள்விக்குச் சீமான் பளீச்

Date:

நாம் தமிழர் கட்சியின் விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கான நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் மதுரையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசியபோது, “மும்மொழி கொள்கையில் தி.மு.க, அ.தி.மு.க-வின் நிலைப்பாடு என்ன? தி.மு.க கூட்டணியில் உள்ள காங்கிரஸின் நிலைப்பாடு என்ன? முதன் முதலில் இந்தியைத் திணித்தது யார்? இந்தியைத் திணித்தவர்களிடம் தி.மு.க கூட்டணி வைத்து வெற்றி பெற்றுள்ளது. திராவிட கட்சிகளின் ஆட்சியில் எந்த இடத்தில் இந்தி இல்லை?

செய்தியாளர் சந்திப்பு

ஒரே நாட்டில் ஒற்றுமையாக வாழ்கிறார்கள் என்பதுதான் இந்த நாட்டின் சிறப்பு. இந்த நாட்டை பா.ஜ.க துண்டிக்கத் துடிக்கிறது. இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டுமானால் மொழி வழியாக மாநிலங்கள் எதற்காகப் பிரிக்கப்பட்டன? இந்தி மொழி பயில வேண்டுமென்றால் அதற்கான சிறப்புக் காரணங்கள் என்ன? இந்திய மொழி இந்தி என எந்த சாசனத்தில் உள்ளது?

இந்தியா பலமொழி பேசும் மக்கள் ஒன்றிணைந்த ஐக்கியம், இந்திய மொழி இந்தி என்று யார் சொன்னது? இந்தி கற்பித்தல் மிகவும் ஆபத்தானது. நாடு எங்கும் இந்தியைத் திணிப்பது தேவையற்றது. இரண்டு, மூன்று மாநிலங்களில் பேசக்கூடிய இந்தி மொழியைத் திணிக்க நினைப்பது தவறு. இந்தி மொழி தேவையெனில் கற்றுக் கொள்ளலாம்.

இந்தி மொழி விவகாரத்தில் திராவிடர்களை நம்ப வேண்டாம். இந்தி மொழியை தி.மு.க உளமார எதிர்க்கிறதா? இந்தி திணிப்புக்கு எதிராக 800 பேர் போராடினார்கள். ஆனால் 18 பேர் எனக் கணக்கு காட்டினார்கள். இந்தியா வளர்ந்த நாடாகியும் இன்னும் மக்கள் பசி பட்டினியுடன் உள்ளனர். ஆங்கிலம் படிப்பது தான் அறிவு எனப் பொதுப்புத்தி உருவாகி உள்ளது. இந்தி படித்தால் அடுத்த கட்ட வளர்ச்சி என்றால் வட மாநிலத்திலிருந்து ஒன்றரை கோடி மக்கள் ஏன் தமிழகத்திற்கு வேலைக்காக வருகிறார்கள்.

சீமான்

இலங்கை, பங்களாதேஷில் நடந்தது இந்தியாவில் நடக்கும், ஏதாவது மொழி கற்றுக் கொள்ள வேண்டும் என்பது என் விருப்பம், திராவிடன் அரியணையில் உட்கார வைக்க வட இந்தியர்தான் தேவைப்படுகிறார். தேர்தல் வியூகங்களுக்கு வட இந்தியர்களுக்குப் பதிலாக இங்குள்ள ஹெச்.ராஜா, ரங்கராஜ் பாண்டேவைப் பயன்படுத்தலாமே?

நான் நோட்டுக்காக, சீட்டுக்காக அரசியலுக்கு வரவில்லை. நம் நாட்டுக்காக அரசியலுக்கு வந்துள்ளேன். தன்னை முன் நிறுத்தி கொள்பவர்கள் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிச் செல்கிறார்கள். நாம் தமிழர் கட்சியில் கட்சிக்காக நான், எனக்காகக் கட்சி என்று செயல்பட வேண்டும். சீமானுக்குப் பின் யார் தலைவர் எனும் போட்டியால் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி வருகிறார்கள். நேர்மையாகக் கட்சி நடத்த வேண்டுமானால் சர்வாதிகாரியாகச் செயல்படுவேன். நான் குட்டை, குளத்தில் வலை வீசவில்லை. தமிழ்த் தேசியம் எனும் பெருங்கடலில் வலை வீசுகிறேன்.

நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துள்ள தி.மு.க, தெருவில் இறங்கி ஏன் போராடுகிறது? மீனவர்கள் கைது, இந்தி திணிப்பு, நிதி ஒதுக்கீடு விவகாரங்களில் ஏன் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராடுகிறது? திராவிடம் பேசாமல், பெரியார் குறித்துப் பேசாமல் நான் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக வளர்ந்துள்ளேன். ஆட்சி அதிகாரத்திலிருந்த பெரிய பெரிய கட்சிகள் கூட்டணிக்கு அழைத்த போதே நான் செல்லவில்லை. ஆகவே தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைப்பது சரியாக வராது” எனக் கூறினார்.

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்’ பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

உட்கட்சிக்குள் எழும் எதிர்ப்புகள்; "நீங்கள் காங்கிரஸில் தொடர்வீர்களா?" – சசி தரூரின் பதில்

ஆபரேஷன் சிந்தூர் மூலம் பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு மத்திய அரசு பதிலடி...

RCB Event Stampede : 'ரசிகர்களுக்கு வேகம் தேவைதான், அதேபோல..!' – செல்வப்பெருந்தகை

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியின் வெற்றி கொண்டாட்டத்தில் மக்கள் உயிரிழந்த...

Tatkal: இனி தட்கல் டிக்கெட் எளிதாக கிடைக்கும்; IRCTC-ல் ஆதார் இணைப்பு வருகிறது!

ரயில் டிக்கெட் புக்கிங் நடைமுறைகளை கொஞ்சம் கொஞ்சமாக கடுமையாக்கி வருகிறது ரயில்வே...