17
February, 2026

A News 365Times Venture

17
Tuesday
February, 2026

A News 365Times Venture

Seeman: "எனக்கு நியாயம் கிடைக்கவில்லை; இதுதான் என் கடைசி வீடியோ" – சீமான் விவகாரத்தில் நடிகை

Date:

“இனிமேல் போராட்டம் செய்துகொண்டும், புகார் கொடுத்துக்கொண்டும் இருக்கப் போவதில்லை. இதுதான் எனது கடைசி வீடியோ” என்று சீமான் விவகாரம் குறித்து நடிகை வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருந்த வீடியோவில், “எனக்கு நடந்தவற்றை மீடியா மூலம் வெளியுலகிற்குச் சொல்ல வேண்டும் என நினைத்தேன். உச்ச நீதிமன்ற தீர்ப்பில் செட்டில்மென்ட் என்று சொல்லி இருக்காங்க. இதனைப் பார்த்ததும் பலர் சீமான் எனக்கு ரூ.10 கோடி இரவோடு இரவாக கொடுத்துவிட்டார். ஈழத்தமிழர்கள் காசை விஜயலட்சுமிக்குக் கொடுத்துட்டார் என சிலர் அபாண்டமாகப் பழி போட்டுவிடுவார்கள். அதனைத் தவிர்க்கவே தற்போது இந்த வீடியோ போடுகிறேன். நேற்று உச்ச நீதிமன்றத்தில் சீமான் தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

சீமான்

அதில் சென்னையில் பதியப்பட்ட FIR மீது காவல்துறை விசாரணை மேற்கொள்ளக் கூடாது என வழக்கு தொடர்ந்து இருந்தார். காவல்துறை சார்பில் உயர் நீதிமன்றத்தில் எனக்காக வாதிட்டனர். உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவு கொடுத்தார். அதன் பெயரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

ஆனால், உச்ச நீதிமன்றத்தில் என் சார்பாக யாரும் பேசவில்லை. சீமான் கோரிக்கை மட்டுமே கேட்டு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். உயர் நீதிமன்றத்தில் எனக்காக வாதிட்டவர்கள் ஏன் நேற்று உச்ச நீதிமன்றத்தில் யாருமே போய் கேட்கவில்லை? இனி எனக்கு எந்த நீதியும் நியாயமும் கிடைக்காது எனத் தெரிந்து கொண்டேன்.

நடிகை

இனி நான் போராடப்போவதில்லை. இதுவரை மக்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி. இப்போது கூட நான் இந்த வீடியோ ஏன் பதிவிடுகின்றேன் என்றால், எனக்கு எந்த நீதியும் கிடைக்கவில்லை என்பதை தெரியப்படுத்த தான். இதுதான் எனது கடைசி வீடியோ” என நடிகை தெரிவித்திருக்கிறார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

மத்திய அரசின் நிதிப்பகிர்வு: தங்கம் தென்னரசு அடுக்கிய குற்றச்சாட்டுகள் என்னென்ன? | Full list

இன்னும் இரண்டு மாதங்களில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க உள்ளது. இதையடுத்து...

உட்கட்சிப் புயல்:“மணி சங்கர் அய்யர் தனிப்பட்ட ஆதாயத்திற்காக…" – கே.சி வேணுகோபால்!; என்ன நடந்தது?

கேரள சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரு மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது....

இந்து கோயிலில் வழிபட்ட மகாராஷ்டிர இஸ்லாமிய அமைச்சர்: கோமியத்தால் கோயிலை சுத்தப்படுத்தியதால் சர்ச்சை

மகாராஷ்டிராவில் அமைச்சராக இருப்பவர் அப்துல் சத்தார். சிவசேனாவை சேர்ந்த அவர் மகா...