25
September, 2026

A News 365Times Venture

25
Friday
September, 2026

A News 365Times Venture

Seeman: "எனக்கு நியாயம் கிடைக்கவில்லை; இதுதான் என் கடைசி வீடியோ" – சீமான் விவகாரத்தில் நடிகை

Date:

“இனிமேல் போராட்டம் செய்துகொண்டும், புகார் கொடுத்துக்கொண்டும் இருக்கப் போவதில்லை. இதுதான் எனது கடைசி வீடியோ” என்று சீமான் விவகாரம் குறித்து நடிகை வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருந்த வீடியோவில், “எனக்கு நடந்தவற்றை மீடியா மூலம் வெளியுலகிற்குச் சொல்ல வேண்டும் என நினைத்தேன். உச்ச நீதிமன்ற தீர்ப்பில் செட்டில்மென்ட் என்று சொல்லி இருக்காங்க. இதனைப் பார்த்ததும் பலர் சீமான் எனக்கு ரூ.10 கோடி இரவோடு இரவாக கொடுத்துவிட்டார். ஈழத்தமிழர்கள் காசை விஜயலட்சுமிக்குக் கொடுத்துட்டார் என சிலர் அபாண்டமாகப் பழி போட்டுவிடுவார்கள். அதனைத் தவிர்க்கவே தற்போது இந்த வீடியோ போடுகிறேன். நேற்று உச்ச நீதிமன்றத்தில் சீமான் தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

சீமான்

அதில் சென்னையில் பதியப்பட்ட FIR மீது காவல்துறை விசாரணை மேற்கொள்ளக் கூடாது என வழக்கு தொடர்ந்து இருந்தார். காவல்துறை சார்பில் உயர் நீதிமன்றத்தில் எனக்காக வாதிட்டனர். உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவு கொடுத்தார். அதன் பெயரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

ஆனால், உச்ச நீதிமன்றத்தில் என் சார்பாக யாரும் பேசவில்லை. சீமான் கோரிக்கை மட்டுமே கேட்டு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். உயர் நீதிமன்றத்தில் எனக்காக வாதிட்டவர்கள் ஏன் நேற்று உச்ச நீதிமன்றத்தில் யாருமே போய் கேட்கவில்லை? இனி எனக்கு எந்த நீதியும் நியாயமும் கிடைக்காது எனத் தெரிந்து கொண்டேன்.

நடிகை

இனி நான் போராடப்போவதில்லை. இதுவரை மக்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி. இப்போது கூட நான் இந்த வீடியோ ஏன் பதிவிடுகின்றேன் என்றால், எனக்கு எந்த நீதியும் கிடைக்கவில்லை என்பதை தெரியப்படுத்த தான். இதுதான் எனது கடைசி வீடியோ” என நடிகை தெரிவித்திருக்கிறார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

தேர்தல் ஆணையம் விவகாரம்: “அமித் ஷாவின் நிழலே ஞானேஷ்குமார்" – காரணங்களை அடுக்கிய மாணிக்கம் தாகூர்

தேர்தல் ஆணையம் மீது தற்போது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. தேர்தல் ஆணையர்...

'ஜெம்' வீரமணி: `சாந்தி, ரஞ்சன்… ரூ.20 கோடியை மிரட்டி வாங்க என்னை அணுகினர்' – ஜான் பாண்டியன் பேட்டி

'ஜெம்' வீரமணி பாலியல் விவகாரத்தில், அடுத்தடுத்த அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன....

வீரமணி போக்சோ வழக்கு: “குற்றவாளிகள் எவ்வளவு பெரிய இடமாக இருந்தாலும்…" – எடப்பாடி பழனிசாமி காட்டம்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கிரானைட் தொழிலதிபர் வீரமணி வழக்கு...

“தலித்துகளுக்கு எதிராக பொய் வழக்குப் புனைவதை காவல்துறை கைவிட வேண்டும்!’’ – திருமாவளவன்

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டில் வி.சி.க தலைவர் திருமாவளவன் இன்று மாலை செய்தியாளர்களைச்...