20
March, 2026

A News 365Times Venture

20
Friday
March, 2026

A News 365Times Venture

Railways: இனி கன்ஃபார்ம் டிக்கெட் இல்லாமல் இந்த ரயில் நிலையங்களுக்குள் செல்ல முடியாது!

Date:

இந்தியாவில் உள்ள 60 முக்கிய ரயில் நிலையங்களில் உறுதிபடுத்தப்பட்ட பயணச்சீட்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே உள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என இந்தியன் ரயில்வேஸ் அறிவித்துள்ளது.

ரயில் நிலையங்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை குறைக்கவும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. விரைவிலேயே பெரிய நகரங்களில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் மட்டும் இந்த திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது.

இந்திய ரயில் நிலையங்களில் இயல்பாகவே கூட்ட நெரிசலுடன் காணப்படும். குறிப்பாக விடுமுறை நாள்களிலும் பண்டிகை நாள்களிலும் கட்டுக்கடங்காத கூட்டத்தைக் காண முடியும். ரயிலில் செல்பவர்களைத் தவிர்த்து அவர்களை அனுப்பி வைக்கவும் அழைக்கவும் வரும் உறவினர்களும் இந்த கூட்டத்துக்கு காரணம்.

புதிய கட்டுப்பாடுகள் தேவையற்ற கூட்டத்தை தவிர்த்து, இனிமையான பயணத்தை வழங்க முயற்சிக்கும் எனக் கூறப்படுகிறது.

ரயில்வே

புதிய நடைமுறைகள் அமலுக்கு வரும் 60 ரயில் நிலையங்களில் முக்கியமானவை,

நியூ டெல்லி ரயில் நிலையம் (டெல்லி)

சத்ரபதி சிவாஜி மஹாராஜ் டெர்மினஸ் (மும்பை)

ஹௌரா ஜன்க்சன் (கொல்கத்தா)

சென்னை சென்ட்ரல் (சென்னை)

பெங்களூரு நகர ரயில் நிலையம் (பெங்களூரு)

ரயில் நிலையத்தின் கூட்டம் மற்றும் புதிய கட்டுப்பாடுகளுக்கான தேவையைப் பொருத்து, மற்ற முக்கிய ரயில் நிலையங்களிலும் இந்த கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரலாம்.

இந்த கட்டுப்பாடுகளால் தொடக்கத்தில் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் நீண்டகால நோக்கில் இது பயணிகளுக்கு சிறந்த அனுபவத்தை வழங்க வழிவகுக்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவிகின்றனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

NDA: 'அத நீங்க தான் பாத்துக்கணும்' – அமித் ஷா சந்திப்பும் எடப்பாடியின் சந்திராஷ்டம கணக்கும்!

மதுரையிலும் திருச்சியிலும் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன், மத்திய அமைச்சர் பியூஷ்...

கரூர்: `100 இடங்களில் மனிதப்பட்டிகள்; திமுக-வினரை கண்டுகொள்ளாத அதிகாரிகள்' – எம்.ஆர்.விஜயபாஸ்கர்

``கரூர் தொகுதியில் வாக்காளர்களை அடைத்து வைத்து இலவசங்களை கொடுத்து ஓட்டு வாங்கும்...

TVK : முதுகுளத்தூரை கேட்கும் இமானுவேல் சேகரன் பேரன்! – முட்டுக்கட்டை போடுவது யார்?

ஊரெங்கும் இப்போது ஒரே பேச்சு... 'சீட்'.திமுக, அதிமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு...

`கூட்டணி இருக்கா இல்லையா?’ – காத்திருக்கும் பாஜக; கூலாக வேட்பு மனுக்களை தாக்கல் செய்த ரங்கசாமி

புதுச்சேரி 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து வெற்றிபெற்ற...