24
April, 2025

A News 365Times Venture

24
Thursday
April, 2025

A News 365Times Venture

Pahalgam Attack: "சாவின் விளிம்பிலிருந்து தப்பினோம்" – காஷ்மீர் தாக்குதல் குறித்து சென்னைப் பெண்

Date:

காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட  தாக்குதலில் 28 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து இருக்கின்றனர்.  

இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்வதற்காக இந்திய ராணுவமும், காஷ்மீர் காவல்துறையும் அனந்த்நாக், பஹல்காம், பைஸ்ரான் ஆகிய இடங்களில் தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளன.

பஹல்காம் தாக்குதல்

இந்நிலையில் இந்தத் தாக்குதலிலிருந்து தப்பித்தது குறித்து சென்னையைச் சேர்ந்த ஜெயஸ்ரீ என்பவர் தனியார் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்திருக்கிறார்.

தாக்குதல் சம்பவம் குறித்துப் பேசிய அவர், ”நாங்கள் சென்னையிலிருந்து வந்திருக்கிறோம். ஏப்ரல் 19-ம் தேதி ஸ்ரீநகருக்கு வந்தோம்.

அங்கிருந்து நேற்றுதான் பஹல்காமிற்குச் சென்றோம். எங்களுடைய சுற்றுலா கைடு (Guide)தான் மினி சுவிட்சர்லாந்து என்று அழைக்கக்கூடிய பஹல்காமில் உள்ள சுற்றுலாத் தளத்திற்கு அழைத்துச் சென்றார்.

அந்தப் பகுதி சென்றடைந்த பிறகுதான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துகிறார்கள் என்று தெரிய வந்தது.

பஹல்காம் தாக்குதல்
பஹல்காம் தாக்குதல்

5 புல்லட் சாட்டுகளை எங்கள் காதால் கேட்டோம். மிகவும் பயமாக இருந்தது. அங்கிருந்து எப்படியாவது தப்பித்து விட வேண்டும் என்று நினைத்தோம். ஒரு வழியாக அங்கிருந்து உயிருடன் தப்பித்துவிட்டோம். சாவின் விளிம்பிலிருந்து தப்பித்ததுபோல் இருக்கிறது” என்று கூறியிருக்கிறார். 

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`50 தொகுதிகள்' EPS கையில் பட்டியல், வொர்க்அவுட் ஆகுமா புது Work Plan?! | Elangovan Explains

இளங்கோவன் எக்ஸ்பிளைன்சில்,அடுத்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக புதுப் புது திட்டங்களை...

Pahalgam Attack: “J&K செல்வது அவர் திட்டமே இல்லை, ஆனால்…" – கலங்கும் கடற்படை அதிகாரியின் தாத்தா!

ஹரியானாவின் கர்னாலைச் சேர்ந்த 26 வயது இந்திய கடற்படை அதிகாரி லெப்டினன்ட்...

Tasmac Case : `முகாந்திரம் உள்ளது' – ED சோதனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி

சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் அலுவலகத்தில் கடந்த மார்ச் 6-ந்தேதி முதல்...