ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலையடுத்து (Pahalgam Attack) இந்திய அரசு பாகிஸ்தான் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஆலோசனைக்கு பிறகு வாகா எல்லை மூடல், சிந்து நீர் ஒப்பந்தம் ரத்து போன்ற அறிவிப்புகளை வெளியிட்டது இந்திய அரசு.
இன்று எக்ஸ் சமூக வலைதளத்தில் பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ கணக்கை இந்தியாவில் முடக்கி உள்ளது இந்திய அரசு. அதனால், இனி யாரும் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கை பார்க்க முடியாது.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் அரசு உள்ளது என்று வலுவாக இந்தியா சந்தேகிக்கிறது. இதையடுத்து தான் அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய அரசு எடுத்து வருகிறது.
ஆனால், ‘எங்களுக்கும் இந்தத் தாக்குதலுக்கு எந்த சம்பந்தமும் இல்லை’ என்று பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப் நேற்று தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா அரசு எடுத்து வரும் நடவடிக்கை பாகிஸ்தான் அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. மேலும், உலக அரங்கிலும் பாகிஸ்தானுக்கு இந்த சம்பவத்தினால் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
