ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்தியத் துப்பாக்கிச் சூடு சம்பவம் நாட்டையே உலுக்கியிருக்கிறது. சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட இந்தத் திடீர் துப்பாக்கிச் சூட்டில் இதுவரை வெளிநாட்டினர் 2 பேர் உள்ளிட்ட 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்திருப்பதாகவும், காயமடைந்தவர்கள் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இந்தத் தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளைப் பிடிக்கும் பணியில் பாதுகாப்புத் துறை தீவிரமாக இறங்கியிருக்கிறது. இந்தத் தாக்குதலை நடத்திய கோழைத்தனமான தீவிரவாதிகளுக்கும், அவர்களுக்குப் பின்னால் இருக்கும் கும்பலுக்கும் தக்க பதிலடி கொடுக்கப்படும் என மத்தியப் பாதுகாப்புத் துறை தெரிவித்திருக்கிறது.
இதில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அரசு மரியாதையுடன் இன்று டெல்லியில் இறுதி மரியாதை செய்யப்பட்டது.
கடந்த ஏப்ரல் 16-ம் தேதி திருமணத்தை முடித்து மனைவியுடன் சுற்றுலா சென்ற இந்திய கடற்படை அதிகாரி லெப்டினன்ட் வினய் நர்வால், தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார். திருமணமான 4 நாள்களில் கணவனை இழந்த அவரது மனைவி சம்பவ இடத்திலேயே அவரது உடலை மடியில் வைத்து கதறி அழுத புகைப்படங்கள் பார்ப்பவர்களைச் சோகத்தில் ஆழ்த்தியது.
இன்று (ஏப்ரல் 23) டெல்லியில் லெப்டினன்ட் வினய் நர்வால் அவர்களின் உடலுக்கு அரசு மாரியாதையுடன் இறுதி மரியாதை செய்யப்பட்டது. கணவரின் உடலுக்கு இறுதி மாரியாதை செய்த லெப்டினன்ட் வினய் நர்வாலின் மனைவி ஹிமான்ஷி நர்வால், “என் வாழ்வில் நான் பார்த்த சிறந்த மனிதர் நீங்கள்தான். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.
VIDEO | Mortal remains of Indian Navy officer Lt. Vinay Narwal who was killed in Pahalgam terror attack was brought to Delhi. His wife Himanshi Narwal was in tears while paying last respect.#vinaynarwal #PahalgamTerroristAttack
(Full video available on PTI Videos -… pic.twitter.com/yHzU7k1n5y— Press Trust of India (@PTI_News) April 23, 2025
அவர் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார். இந்த உலகம் பாதுகாப்பாக இருக்க அவரும் காரணமாக இருந்திருக்கிறார். நாம் அனைவரும் அவரைப் பற்றி எல்லா வகையிலும் பெருமைப்பட வேண்டும்” என்று கண்ணீருடன் கணவரின் உடலுக்கு மரியாதை செய்தார்.
அவரது குடும்பத்தினர், “அரசாங்கம் இப்படி கொடூரத் தாக்குதல் நடத்துபவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கி, பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம், ” என்று ஆதங்கத்துடன் அரசுக்கு வேண்டுகோள் வைத்தனர்.
Last video shared by Lt. Vinay Narwal before he was killed by terrorists. Just 26, newly married, and committed to serving the nation—his life was cut short in the Pahalgam massacre. Life can be brutally unfair.
Hope justice is served
#PahalgamTerroristAttack pic.twitter.com/uyqo5dQI5c— Nikhil saini (@iNikhilsaini) April 23, 2025
லெப்டினன்ட் வினய் நர்வாலின் இறுதி அஞ்சலி இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், லெப்டினன்ட் வினய் நர்வால், உயிரிழக்கும் முன்பு தாக்குதல் நடந்த இடத்தில் மனைவியுடன் மகிழ்ச்சியாக இருக்கும் வீடியோ வைரலாகி, பார்ப்பவர்களை சோகத்தில் ஆழ்த்தி வருகிறது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
