22
April, 2026

A News 365Times Venture

22
Wednesday
April, 2026

A News 365Times Venture

Operation Sindoor: 9 இடங்களில் இந்திய ராணுவம் தாக்குதல்; பஹாவல்பூரைக் குறிவைக்க என்ன காரணம்?

Date:

ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். அப்போதிலிருந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே வார்த்தைப்போர் தொடங்கியது.

ஒருகட்டத்தில் இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளுக்கும் ‘மக்களுக்குப் போர் பாதுகாப்புப் பயிற்சி வழங்க வேண்டும்” என உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில்தான் `ஆப்பரேஷன் சிந்தூர்’ தாக்குதலை இந்திய ராணுவம் நடத்தியிருக்கிறது.

Operation Sindoor

இந்தத் தாக்குதலில் 5 பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும், 4 பாகிஸ்தானிலும் இருந்த தீவிரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை இணைந்து நடத்திய இந்த முப்படை தாக்குதல் நடவடிக்கையில் ‘எந்த பாகிஸ்தான் ராணுவ தளங்களும் தாக்கப்படவில்லை’ எனவும் மத்திய அரசு விளக்கமளித்திருக்கிறது.

தாக்குதல் நடத்தப்பட்ட இடங்களில் பஹாவல்பூரில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது (JeM) தளம், முரிட்கேயில் உள்ள லஷ்கர்-இ-தொய்பாவின் (LeT) தளம் ஆகிய இடங்கள் முக்கியமானவை.

ஐ.நா.வால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட மசூத் அசார் 1999-ல் விடுவிக்கப்பட்டதிலிருந்து, பஹாவல்பூர் நீண்ட காலமாக ஜெய்ஷ்-இ-முகமதுவின் தளமாகச் செயல்பட்டு வருகிறது.

இந்தியா, பாகிஸ்தான்
இந்தியா, பாகிஸ்தான்

இது தொடர்பாக வெளியான தகவலில், தீவிரவாதிகளின் தளங்களைத் துல்லியமாக உளவுத்துறை அமைப்புகள் வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்தியாவில் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு நிதியுதவி செய்யும் ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர் இ-தொய்பா தலைமையகத் தளங்களை இந்தியப் படைகள் தாக்குதல்களுக்கான இடங்களாகத் தேர்வு செய்தன.

மேலும், தீவிரவாத முகாம்களைக் குறிவைக்கச் சிறப்புத் துல்லிய வெடிமருந்துகள் பயன்படுத்தப்பட்டன.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

தமிழகத்தில் பறக்கும் படை வேட்டையில் சிக்கியது இத்தனை கோடிகளா? – அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட தகவல்

தமிழ்நாட்டில் இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட பரிசுப்பொருட்கள் மற்றும் பணம் குறித்த விவரங்களை...

மேற்கு வங்கம்: 'எல்லாம் திட்டமிட்ட திரைக்கதை.!'- காரப்பொரி வாங்கி சாப்பிட்ட மோடியை விமர்சித்த மம்தா

294 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய மேற்கு வங்க மாநிலத்தில் இரண்டு கட்டங்களாகத்...

மேற்கு வங்கம் : பிரசார களத்துக்கு வந்த 'மீன்கள்' ; மேற்கு வங்கத்தை அசைக்கும் உணவு யுத்தம்!

கொல்கத்தாவின் பாரக்பூர் தொகுதியின் பா.ஜ.க வேட்பாளரான கௌஸ்தவ் பக்சி, பாரம்பரிய உடை...