31
October, 2026

A News 365Times Venture

31
Saturday
October, 2026

A News 365Times Venture

Omar Abdullah: ஊடகவியலாளரை மணந்த ஜம்மு & காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா – வைரலாகும் புகைப்படங்கள்!

Date:

ஜம்மு & காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, ஊடகவியலாளர் நிதி ரஸ்தான் என்பவரைத் திருமணம் செய்திருக்கிறார். இருவரும் தங்களது திருமணப் புகைப்படங்களைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்து, இத்தகவலை அதிகாரப்பூர்வமாகப் பகிர்ந்திருக்கிறார்கள்.

எக்ஸ் தளத்தில் புகைப்படத்தைப் பகிர்ந்த முதல்வர் உமர் அப்துல்லா, “நேற்று ஒரு புதிய பயணம் தொடங்கியது” எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார். அதேவேளையில் நிதி ரஸ்தான், “இட்ஸ் டன் ப்ரோ” எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார்.

கடந்த ஜூலை 31-ம் தேதி, உமர் அப்துல்லா மற்றும் அவரது முன்னாள் மனைவி பாயல் அப்துல்லா இடையே ஏற்பட்ட பிரச்சனைகளைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் அவர்களுக்கு விவாகரத்து வழங்கியது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் ஒன்றாகப் பணியாற்றிய போது சந்தித்துக் கொண்ட உமர் அப்துல்லா மற்றும் பாயல் ஆகிய இருவரும் கடந்த 1994-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

Omar Abdullah – Nidhi Razdan

இவர்களுக்கு ஜாஹிர் மற்றும் ஜமீர் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த 2011-ஆம் ஆண்டு, தாங்கள் இருவரும் பிரிந்துவிட்டதாக உமர் அப்துல்லா அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த இவர்களது விவாகரத்து வழக்கை நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் முடித்து வைத்தது. தற்போது நிதி ரஸ்தானை உமர் அப்துல்லா திருமணம் செய்து கொண்டுள்ள செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

அதிமுக-விலிருந்து வேலுமணி, சி.வி.சண்முகம் நீக்கம்? – இ.பி.எஸ் எடுத்த அதிரடி முடிவு?

அ.தி.மு.கவிலிருந்து முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணியை நீக்க பொதுச்செயலாளர்...

'டெல்லியின் மெசேஜ்' – இடைத்தேர்தலுக்கு விஜய் போடும் ஸ்கெட்ச்! – திட்டம் என்ன?

தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் விரைவில் நடக்குமென எதிர்பார்க்கப்படும் நிலையில், முதல்வர்...

ஈரான் போர்: `ஐரோப்பாவுக்கு மட்டும் 100 பில்லியன் யூரோவுக்கும் அதிகமான செலவு' – இந்தியாவின் நிலை?

ஈரான் போர் தொடங்கியதிலிருந்து கச்சா எண்ணெய் விலை ஏறுமுகத்திலேயேதான் இருக்கிறது.தற்போது சர்வதேச...