இன்று (ஏப்ரல் 12) தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பேற்பு கூட்டம் நடந்து வருகிறது.
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றார். இந்தக் கூட்டத்திற்குக் கலந்துகொள்ள வந்த நடிகையும் பாஜக நிர்வாகியுமான நமீதாவிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டன.
அதற்கு அவர், “அதிமுக – பாஜக கூட்டணி சக்தி வாய்ந்ததாக இருக்கும். இந்தக் கூட்டணி குறித்து தமிழ்நாடு மக்கள் ஆர்வமாக உள்ளனர். அதனால், இந்த கூட்டணி சூப்பர் ஹிட் கூட்டணி ஆகப்போகிறது” என்று பதிலளித்துள்ளார்.
நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அமித் ஷா அதிமுக – பாஜக கூட்டணியை உறுதிசெய்தார்.
நேற்று இந்த பதவிக்கான விருப்ப மனுத் தாக்கல் நடத்தப்பட்டது. அதில் நயினார் நாகேந்திரன் மட்டுமே விருப்ப மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இதையொட்டி, இன்று நடந்துவரும் அந்த பொறுப்பேற்பு கூட்டத்தில் தற்போது நயினார் நாகேந்திரன் தலைவராகப் பொறுப்பேற்று இருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY