11
Friday
April, 2025

A News 365Times Venture

Modi TN Visit: `ராமேஸ்வரம், மதுரை' – பிரதமர் மோடியின் தமிழக விசிட்டும், தகிக்கும் அரசியல் களமும்

Date:

டெல்லிக்கு அ.தி.மு.க தலைவர்கள் படையெடுப்பு, பா.ஜ.க மாநிலத் தலைவர் மாற்றம் தொடர்பான பரபரப்பு, ‘மும்மொழிக் கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு விவகாரங்களில்’ பா.ஜ.க-வுக்கு எதிராக தி.மு.க கூட்டணி போர்க்கொடி… எனத் தமிழக அரசியல் தகித்துக்கொண்டிருக்கிறது. இதற்கிடையில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் மாற்றத்தின் சலசலப்பு. இந்தச் சூழலில், நாளை (ஏப்ரல் 6) தமிழகத்துக்கு வருகிறார் பிரதமர் மோடி.

மோடி

ராமேஸ்வரத்தில், பிரதமர் பேசுவதற்கு பிரமாண்ட விழாவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. புதிய பாம்பன் ரயில் பாலத்தைத் திறந்து வைக்கவிருக்கிறார். இதுதவிர ராமேஸ்வரத்தில் செவ்வாய் ஹோரை சமயத்தில் பூஜைகளைச் செய்யவிருக்கிறார். அரசியல் சந்திப்புகள், வழிபாடு என ராமேஸ்வரம் பயணத்தை முடித்துக்கொண்டு, பிரதமர் மதுரைக்கும் செல்லவிருக்கிறார். அரசியல் வி.ஐ.பி-க்கள் பலரும் பிரதமர் சந்திப்புக்கு நேரம் கேட்டுள்ளனர்.

இந்நிலையில் பிரதமர் மோடி, “நாளை, ஏப்ரல் 6ஆம் தேதி, புனிதமான ராம நவமி நாளில், தமிழ்நாட்டின் எனது சகோதர சகோதரிகளுடன் சேர்ந்திருப்பதை நான் ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன். புதிய பாம்பன் ரயில் பாலம் திறந்து வைக்கப்படவுள்ளது. ஸ்ரீ அருள்மிகு ராமநாதசுவாமி ஆலயத்தில் நான் பிரார்த்தனை நடத்தவுள்ளேன். ரூ 8,300 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளும் தொடங்கி வைக்கப்படும் அல்லது அடிக்கல் நாட்டப்படும்” என்று பதிவிட்டுள்ளார்.

இப்படியான பல அரசியல் வி.ஐ.பி-க்கள் சந்திப்பு, தமிழக பாஜக மாநிலத் தலைவர் சர்ச்சைகள், கூட்டணி விவகாரங்கள், வருத்தங்களைக் கொட்டித்தீர்க்க காத்திருக்கும் அரசியல் புள்ளிகள் என நாளை அரசியல் வெடிகள் ஒவ்வொன்றாக வெடிக்கத் தயாராக இருக்கின்றன. அது பல்வேறு அரசியல் நகர்வுகளுக்கும், யூகங்களுக்கும் அடித்தளமிட்டு தகிக்கும் தமிழக அரசியலில் எண்ணெய்யை ஊற்றவிருக்கிறது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel


Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

“நாளை செய்தி வரும்..'' – பாஜக மாநில தலைவர் தேர்வு குறித்து நயினார் நாகேந்திரன்

இன்று (ஏப்ரல் 11) மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு...

“என் தந்தை விண்ணிலிருந்து..!'' அமித் ஷா சொன்ன வார்த்தை – உருக்கமாக பேசிய தமிழிசை

தமிழகம் வந்திருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழிசை சௌந்தரராஜனின்...

`திமுக துணை பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து பொன்முடி நீக்கம்' – மு.க.ஸ்டாலின் அதிரடி

தமிழ்நாடு அமைச்சர் பொன்முடியை அவர் வகித்த கட்சி பதவியில் இருந்து விலக்கியுள்ளது...

ட்ரம்ப்பின் வரிக்கு மௌனம் கலைத்த இந்தியா; அடுத்து என்ன செய்ய போகிறோம்? – அமைச்சரின் பதில்!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பரஸ்பர வரி அறிவித்து, கிட்டதட்ட 10 நாள்களுக்கு...
13:17