26
March, 2026

A News 365Times Venture

26
Thursday
March, 2026

A News 365Times Venture

Modi: "நமது நாட்டின் ஒவ்வொரு தாய்க்கும், சகோதரிகளுக்கும், மகள்களுக்கும்..!" – மோடி உரை

Date:

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி, சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் மொத்தம் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்தப் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில்  ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் ஜம்மு – காஷ்மீர் எல்லையில் இருக்கும் தீவிரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது இந்திய ராணுவம். இதையடுத்து இரு நாடுகளும் தாக்குதல்களை நடத்த நாடு முழுவதும் போர் பதற்றம் ஏற்பட்டது.

Operation Sindoor – ஆபரேஷன் சிந்தூர்

இரண்டு நாடுகளுக்கு மத்தியில் பேச்சுவார்த்தை நடத்தி இந்த சூழலை கட்டுக்குள் கொண்டுவர முயல்வதாக அமெரிக்கா தொடர்ந்து பேசிவந்தது. இதையடுத்து கடந்த மே 10 ம் தேதி தாக்குதல் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பஹல்கம் தாக்குதலுக்குபிறகு பிஹாரில், “தீவிரவாதிகளையும், அவர்கள் பின்னால் இருப்பவர்களையும் விரைவில் கண்டிபிடித்துக் கடுமையாக தண்டனை வழங்கப்படும்” என்று பேசியிருந்தார்.

தற்போது சிந்தூர் ஆபரேஷனுக்குப் பிறகு பேசியிருக்கும் மோடி, “கடந்த சில நாட்களில் நாட்டின் திறமையையும் பொறுமையையும் நாம் அனைவரும் கண்டோம். ஆயுதப்படைகள், ராணுவம், உளவுத்துறை மற்றும் விஞ்ஞானிகளுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன்

நம் ஆயுதப் படைகளின் இந்த வீரம், துணிச்சலை நமது நாட்டின் ஒவ்வொரு தாய்க்கும், சகோதரிகளுக்கும், ஒவ்வொரு மகள்களுக்கும் அர்ப்பணிக்கிறேன்.

” என்று பேசிவருகிறார்.

மோடியின் உரையைத் தொடர்ந்து வாசிக்க விகடனுடன் இணைந்திருங்கள்…

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

“அடுத்த 60 நாள்களுக்கு…" – இந்தியாவில் எரிபொருள் பற்றாக்குறை வதந்திக்கு மத்திய அரசு விளக்கம்!

ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் போர் காரணமாக ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை...

"நாங்கள் சிரித்துக்கொண்டே அழுகிறோம்.!"- திமுக-வின் தொகுதிப் பங்கீடு குறித்து மதிமுக அர்ஜுனராஜ்

திமுக தங்களுக்கு கொடுத்த எண்ணிக்கை, சின்னம் தொடர்பாக தங்களுக்கு வருத்தம் உள்ளதாக...

முட்டி மோதும் நிர்வாகிகள்; நண்பரைக் களமிறக்கும் விஜய் டு சீமானுக்கு ஜோதிடரின் அறிவுரை! | கழுகார்

அறுபடை வீட்டில் ஆரம்பித்த சீமான்!ஜோதிடரின் அறிவுரை...தேர்தல் பிரசாரம் தொடங்கும்போதெல்லாம், ஒவ்வொரு முறையும்...

இரு முறை அமைச்சர்; ஒரு முறை தோல்வி – ஜோலார்பேட்டையில் மீண்டும் ஜொலிப்பாரா கே.சி.வீரமணி?

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளராக முன்னாள் அமைச்சர்...