25
March, 2026

A News 365Times Venture

25
Wednesday
March, 2026

A News 365Times Venture

MK Stalin Speech: `அடுத்த ஆண்டு இதே நாள்; தலைப்புச்செய்தி இப்படி இருக்க வேண்டும்'- முதல்வர் ஸ்டாலின்

Date:

“கழகம் இதுவரைக்கும் அடைந்த வெற்றிகளுக்கெல்லாம் நீங்கள்தான் காரணம். உடன்பிறப்புகளான நீங்கள் இல்லாமல் கழகமும் இல்லை, நானும் இல்லை..” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் பேசினார்.

அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேரதலுக்கான முன்னேற்பாடுபோல மதுரையில் பிரமாண்டமாக நடந்த திமுக பொதுக்குழுவில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டு, தீர்மானஙகள் நிறைவேற்றப்பட்டன. விழாவின் நிறைவில் சிறப்புரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “அந்த காலத்தில் எந்த ஊருக்குச் சென்றாலும் நம்முடைய கொடி பறக்கிறதா என்று என் கண்கள் தேடும். தமிழ்நாட்டில் அத்தனை ஊரிலும், அத்தனை நகரத்திலும் அதிக கொடியேற்றிய கை, இந்த ஸ்டாலினின் கை.

பொதுக்குழுவில் கலந்துகொண்ட நிர்வாகிகள்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், அறிவுலக ஆசான் பேரறிஞர் அண்ணா, தமிழினத் தலைவர் கலைஞர், திராவிட முன்னேற்றக் கழகம், கருப்பு சிவப்புக் கொடி, உதயசூரியன் சின்னம், அண்ணா அறிவாலயம், இவைதான் நம் உயிர்.

தடம் மாறாத கொள்கைக் கூட்டம் நாம். அதனால்தான் எந்த கோமாளிக் கூட்டத்தாலும் நம்மை வெல்ல முடியவில்லை; இனியும் வெல்ல முடியாது, அடுத்த ஆண்டு இந்த நேரத்தில் என்ன மாதிரி தலைப்புச் செய்தி வந்திருக்கவேண்டும் என்றால், ‘ஏழாவது முறையாக தி.மு.க. ஆட்சி அமைத்தது. கழகக் கூட்டணி வரலாறு காணாத வெற்றியைப் பெற்று இரண்டாவது முறையாக திராவிட மாடல் ஆட்சி தொடர்கிறது’ என்று தலைப்புச் செய்தியாக இருக்கவேண்டும். அதுக்கான வியூகத்தை வகுக்கும் பொதுக்குழுதான் இது.

நான் மமதையில் பேசுகிறவன் அல்ல கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் எதிரிகளே இல்லை என்று ஆணவக் குரலில் சொல்பவன் அல்ல. எந்தக் காலத்திலும் எனக்கு ஆணவமோ, மமதையோ வராது. என்னைப் பொறுத்தவரைக்கும், பணிவுதான் தலைமைப் பண்பின் அடையாளம். சொல்லைவிட செயலே பெரிது. வரலாறு காணாத வெற்றியை நாம் பதிவு செய்வோம் என்று நான் சொல்வது, உங்கள் மேல் இருக்கும் நம்பிக்கையில்தான்.

பொதுக்குழுவுக்கு வராத இரவு பகல் பார்க்காமல், வெயில் மழை பார்க்காமல் தனக்கு என்ன பயன் என்று பார்க்காமல் உழைக்கும்,கோடிக்கணக்கான உடன்பிறப்புகளையும் நம்பித்தான் சொல்கிறேன். கழகம் இதுவரைக்கும் அடைந்த வெற்றிகளுக்கெல்லாம் நீங்கள்தான் காரணம். உடன்பிறப்புகளான நீங்கள் இல்லாமல் கழகமும் இல்லை. நானும் இல்லை.

என்னைத் தலைவராக முதலமைச்சராக்கி உயர்வைத் தந்தது, நீங்களும், மக்களும். உலகத்தில் எந்தக் கட்சிக்கும், இப்படிப்பட்ட உறுதிமிக்க உழைப்பாளிகள் தொண்டர்களாகக் கிடைத்திருக்க மாட்டார்கள். சூரியன் நிரந்தரமானது. அதேபோன்று கழகமும் நிரந்தரமானது. அதேபோன்று கழக ஆட்சியும் நிரந்தரமானது என்ற நிலையை நாம் உருவாக்கவேண்டும்.

கட்சியினருடன் உணவருந்திய மு.க.ஸ்டாலின்

கடந்த அ.தி.மு.க–பா.ஜ.க கூட்டணி ஆட்சியால், அதல பாதாளத்துக்கு சென்ற தமிழ்நாட்டை மீட்டிருக்கிறோம். ஒன்றிய பா.ஜ.க. அரசு, நம்முடைய உரிமைகளுக்கு எதிராக எத்தனை நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், அத்தனையையும் எதிர்த்து இன்றுவரை போராடி வருகிறோம்.

சூரியன் நிரந்தரமானது. அதேபோன்றுகழகமும் நிரந்தரமானது. கழகம் எப்படி நிரந்தரமானதோ, அதேபோன்று கழக ஆட்சியும் நிரந்தரமானது என்ற நிலையை நாம் உருவாக்கவேண்டும்.

தி.மு.க. ஆட்சிக்கு எதிரான அலையைவிட, ஆதரவு அலைதான் அதிகமாக வீசுகிறது. அது வெளியே தெரியாமல் மறைக்க திசை திருப்ப சிலர் நினைக்கிறார்கள்.

மு.க.ஸ்டாலின்

கடந்த அ.தி.மு.க, பா.ஜ.க. கூட்டணி ஆட்சியால், அதல பாதாளத்துக்குச் சென்ற தமிழ்நாட்டை மீட்டிருக்கிறோம். ஒன்றிய பா.ஜ.க. அரசு, நம்முடைய உரிமைகளுக்கு எதிராக எத்தனை நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், அத்தனையையும் எதிர்த்து இன்றுவரை போராடி வருகிறோம்.

அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணியை அமித்ஷா அறிவித்தபோது ஒரு வார்த்தைகூட பேசாமல் பவ்யமாக பக்கத்தில் உட்கார்ந்திருந்தார் பழனிசாமி. என்ன ஒரு அடக்கம்? சசிகலா இவரை முதலமைச்சராக அறிவித்தபோது, எப்படி எல்லாம் ஆக்சன் செய்தாரோ அதே மாதிரி நடிப்பு. என்ன, காலில் மட்டும்தான் விழவில்லை. அதை தனியாகச் செய்தாரா என்று நமக்குத் தெரியவில்லை” என்று பேசினார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"அணு ஆயுதக் கொள்கையில் பின்வாங்கப்போவதில்லை" – ட்ரம்பிற்கு வடகொரிய அதிபர் பதிலடி

2019-ம் ஆண்டு வியட்நாம் நாட்டின் ஹனோய் (Hanoi) நகரில் நடைபெற்ற வரலாற்று...

கோபம், வெதும்பல், ஆற்றாமை, உற்சாகம்.. களேபரங்களுடன் இறுதியான கூட்டணி! யாருக்கு லாபம்? ஏமாந்தது யார்?

கடந்த ஐம்பது ஆண்டுகளாக தமிழகத்தை மாறி மாறி ஆண்டு வரும் இரண்டு...

`ஒரு டீ விலை 5 ரூபாய் இருக்கும்போது 50,000 லிமிட்னு சொன்னாங்க.! இன்னைக்குமா?' – விக்கிரமராஜா

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருப்பதை ஒட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு...