8
November, 2026

A News 365Times Venture

8
Sunday
November, 2026

A News 365Times Venture

Mk Stalin: “மத்திய அரசு தரலைன்னா என்ன? நான் தரேன்.." – முதல்வரை நெகிழவைத்த சிறுமி!

Date:

தமிழக முதல்வர் மு .க. ஸ்டாலினின் கல்விக் கொள்கைக்கு ஆதரவாக கடலூரைச் சேர்ந்த நன்முகை என்ற சிறுமி தனது சேமிப்பில் இருந்து ரூபாய் 10000 நன்கொடையாக வழங்கியுள்ள செயல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கடலூர் மாவட்டம் வேப்பூரில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசிய கல்விக் கொள்கை (NEP) தொடர்பாக உரையாற்றினார். மும்மொழிக்கொளையை வலியுறுத்தும் தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்றால் மட்டுமே மத்திய அரசு நிதி வழங்கும் என அறிவித்துள்ளதாக அவர் கூறினார்.

மு.க.ஸ்டாலின்

அத்துடன் தமிழக அரசு தன் நிலைப்பாட்டை மாற்றாது, மாணவர்கள் பாதிப்பு ஏற்படாமல் கல்விக்கு தேவையான நிதியை வழங்கும் என உறுதியளித்தார்.

முதல்வரின் உரை மனதில் தாக்கம் ஏற்படுத்தியதால் கடலூரைச் சேர்ந்த நன்முகை என்ற LKG மாணவி, ரூ.10,000 நன்கொடையாக வழங்கி முதல்வரின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இந்த செயல் சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது.

சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நன்முகையின் வீடியோவில் சிறுமி, “நம் தமிழ் மொழியை காக்க நீங்கள் பாடுபடுவீர்கள் என்று கூறினீர்கள், என் பாலு தாத்தாவும் , சாந்தி பாட்டியும் தமிழ் ஆசிரியர்கள். அதனால் மத்திய அரசு தரவேண்டிய பணத்தை நான் உங்களுக்கு எனது பங்களிப்பாக ரூபாய் 10,000 அனுப்பி வைக்கிறேன்” என மழலை மொழியில் பேசியுள்ளார்.

MK Stalin

நன்முகையின் செயல் குறித்து இன்று திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் மு.க.ஸ்டாலின். அவர், “கடலூரைச் சேர்ந்த சிறுமி நன்முகை, “ஒன்றிய அரசு நிதி தரலைன்னா என்ன, நான் தருகிறேன்” என்று 10 ஆயிரம் ரூபாயைக் காசோலையாக அனுப்பி நெகிழ வைத்திருக்கிறார். இதுதான் தமிழ்நாட்டு மக்களின் உணர்வு. நெகிழ வைத்த நன்மகள் நன்முகையின் உணர்வுதான், நம் தமிழ்நாட்டின் உணர்வு! ‘இது இன்பத் தமிழ்நாடு. இங்கே ஆதிக்கத்திற்கு இடமில்லை ஓடு!’ என்று துணிந்து சொல்லும் வலிமை நமக்கு உண்டு” என எழுதியுள்ளார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

இஸ்ரேஸ் தேர்தல்: ஆட்சி அமைக்க காடி ஐசென்காடுக்கு அழைப்பு; பின்னடைவில் பெஞ்சமின் நெதன்யாகு!

இஸ்ரேலில் அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து, புதிய அரசை...

பெரியார் அறிவுலகம் நூல் சர்ச்சை: "பொது நூலகங்களை ஆய்வு செய்ய விசாரணை ஆணையம் வேண்டும்" – திருமாவளவன்

Qகோவை பெரியார் அறிவுலகத்தில் உண்மைக்கு முரணான கருத்துகளைக் கொண்ட புத்தகங்கள் அதிக...

'இந்தியாவின் ராமர்களும்…மோடி காலத்திய வலதுசாரி படங்களும்!' – ஓர் அலசல்!

தீபாவளியை முன்னிட்டு வெளியாகியிருக்கும் 'ராமாயணம்' திரைப்படத்தின் ஒரு புரோமஷன் நிகழ்ச்சி. அதில்...

'ஆட்குறைப்பு, நோ ரெஸ்பான்ஸ், கள்ள மௌனம்!' – ஒன்றிய – மாநில உறவு கமிட்டியை தவெக அரசு எப்படி கலைத்தது?

ஒன்றிய - மாநில அரசுகளின் உறவு குறித்து ஆராய திமுக ஆட்சிக்...