24
October, 2026

A News 365Times Venture

24
Saturday
October, 2026

A News 365Times Venture

`Meta AI Glass அணிந்து என்னை பார்க்க வந்தார் அந்த நபர்…' – Sting Operation குறித்து DK சிவக்குமார்

Date:

கர்நாடகா அரசு மற்றும் அமைச்சர்களை டார்கெட் செய்து ‘ஸ்டிங் ஆபரேஷன்’ நடப்பதாக கர்நாடகாவின் காங்கிரஸ் அரசு தொடர்ந்து கூறி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் நேர்காணல் ஒன்றில் அவருக்கு எதிரான ஸ்டிங் ஆபரேஷன் குறித்துப் பேசியுள்ளார்.

இது குறித்து அவர், “மெட்டா AI கண்ணாடியை அணிந்துகொண்டு ஒரு தொழிலதிபர் என்னைப் பார்க்க வந்தார். அவர் மீது எனக்கு சந்தேகம் வந்ததால், அவருடைய பின்னணி குறித்து விசாரித்தோம். அப்போதுதான் அரசியல் தலைவர்களைக் குறிவைப்பதற்கான நடவடிக்கைகளைத் தெரிந்துகொண்டோம்.

மெட்டா கண்ணாடி

கடவுள் எனக்கு ஒரு சிறப்புப் பவரைக் கொடுத்திருக்கிறார். ஒருவரின் முகத்தைப் பார்த்த உடனேயே, அவர்கள் எதற்காக என்னைப் பார்க்க வந்திருக்கிறார்கள்… அவர்களுடைய எண்ணம் என்ன என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியும். எனக்கு முகத்தைப் படிக்கத் தெரியும்.

வந்தவர் ஆரம்பத்தில் தொழில் சார்ந்த விஷயங்களைப் பேசினார். ஆனால் பின்னர் ஒரு தனி அறைக்குச் சென்று, லேப்டாப்பைத் திறந்து அரசியல் பற்றிப் பேசத் தொடங்கினார்.

என்னையும் கர்நாடக அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோலியையும் சந்தித்தபோது அவர் அந்தக் கண்ணாடியை அணிந்திருந்தார். ஆனால் மற்ற முக்கிய அரசியல் தலைவர்களைச் சந்தித்தபோது அவர் அதை அணியவில்லை.

நான் அவர்கள் அனைவரையும் அழைத்து இந்தச் சம்பவம் குறித்த பதிவுகளைச் சேகரித்துள்ளேன். இப்போது அதை வெளியிடமாட்டேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

கேரள லோக்பவனில் இனி சைவ சமையல் மட்டுமே! – புதிய கவர்னர் பதவியேற்றதும் உத்தரவு

சிக்கிம் மாநில ஆளுநராகப் பணியாற்றி வந்த ஓம் பிரகாஷ் மாத்துர், கேரள...

சிவகங்கை: "இலவசங்கள் வேண்டாம்; வேலை கொடுங்க" – 5 வயது மகனுடன் சாலையில் படுத்து கைம்பெண் போராட்டம்

சிவகங்கை பேருந்து நிலையம் முன்பு, கணவனை இழந்த இளம் பெண் ஒருவர்...

"அங்குதான் அவரைச் சந்தித்தேன்; நினைவுகள் நிறைந்த உலகம்.."- ராஜீவ் காந்தியுடனான காதல் குறித்து சோனியா

மூத்த காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சோனியா காந்தி ‘Belonging: A...

"திருமாவளவனை முதல்வராக்க நானும் எடப்பாடியும் முயன்றோம்" – என்ன சொல்கிறார் டிடிவி தினகரன்?

அதிமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று (அக்.24) செய்தியாளர்களைச் சந்திருக்கிறார். அப்போது,...