9
June, 2026

A News 365Times Venture

9
Tuesday
June, 2026

A News 365Times Venture

Mazagon Dock: `தமிழ்நாடு டு ஆந்திராவா… இங்கு என்ன பிரச்னை?' – தொழிற்துறை சொல்வதென்ன?

Date:

தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய முதலீடு தற்போது ஆந்திரா பக்கம் திசை மாறுகிறதா என்கிற பரபரப்பு கேள்வி தற்போது தொழிற்துறையில் எட்டிப்பார்த்துக் கொண்டிருக்கிறது.

கடந்த செப்டம்பர் மாதம், மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட் நிறுவனம் தூத்துக்குடியில் கிரீன்ஃபீல்ட் கப்பல் கட்டும் தளம் கட்டுவதற்காக ‘கைடன்ஸ் தமிழ்நாடு’ உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டது.

அந்தத் திட்டத்திற்காக தமிழ்நாட்டில் ரூ.15,000 – 18,000 கோடி முதலீடு செய்யப்படும் என்றும் அந்த நிறுவனம் கூறியிருந்தது.

மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட்

இந்தக் கிரீன்ஃபீல்ட் கப்பல் தளம் 1,050 ஏக்கருக்கு பிளான் செய்யப்பட்டது. அங்கே 3 லட்சம் DWT (Deadweight Tonnage) வரையிலான மிகப் பெரிய கச்சா எண்ணெய் கப்பல்கள் உற்பத்தி செய்வது தான் பிளான்.

இந்தத் திட்டத்தின் காலம் 10-12 ஆண்டுகள் ஆகும்.

ஆனால், இந்தத் திட்டத்திற்காக தமிழ்நாடு அரசு இன்னும் இடம் ஒதுக்காததால், மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட் ஆந்திரா பக்கம் மெல்ல நகர்ந்துள்ளது என்பது தான் பரபரக்கும் செய்தி.

மசகான் நிறுவனம் தற்போது ஆந்திராவில் கிட்டத்தட்ட ரூ.29,000 கோடி மதிப்புள்ள கப்பல் கட்டும் தளத்திற்காக இடம் தேடி வருகிறது.

தமிழ்நாட்டில் பிளான் செய்த அதே திட்டத்தை, ஆந்திராவிற்கு எடுத்துச் செல்லும் போது, கிட்டத்தட்ட 2,000 ஏக்கர் கொண்ட மெகா கப்பல் கட்டும் தளமாக விரிவு செய்துள்ளது என்கிறார்கள்.

தமிழ்நாட்டில் இருந்து ஆந்திரா பக்கம் ஒரு திட்டம் செல்வது தமிழ்நாடு தொழிற்துறைக்கு நல்லதல்ல என்கிற குரல்கள் எழுகின்றனர்.

இது குறித்து தமிழ்நாடு தொழிற்துறையின் சில முக்கிய அதிகாரிகளிடம் பேசினோம்…

“மத்திய கப்பல் அமைச்சகம் வழிகாட்டுதல் படி, இந்தியாவில் கப்பல் கட்டும் தளத்திற்கு 2,000 ஏக்கர் கட்டாயம் தேவை. ஆனால், மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட் நிறுவனம் கேட்பது என்னவோ 600 ஏக்கர் மட்டுமே.

ஷிப் பில்டர்ஸ்
ஷிப் பில்டர்ஸ்

மேலும், ஹூண்டாய் நிறுவனம் தூத்துக்குடியில் கேட்டுள்ள அதே நிறுவனத்தை மசகான் நிறுவனமும் கேட்கிறது. ஏற்கெனவே, ஹூண்டாய் உடன் அந்த இடத்திற்கு ஒப்பந்தம் போடப்பட்டுவிட்டதால், மசகான் நிறுவனத்திற்கு அதை கொடுக்கவும் முடியாது.

இன்னொரு பக்கம், ஹூண்டாய் நிறுவனம் மற்றும் மசகான் நிறுவனம் இணைந்து ஒரு ஒப்பந்தம் போட்டுக்கொண்டால், 2,000 ஏக்கர் பிரச்னை வராது. ஆனால், இரு நிறுவனங்களுக்கு அது செட் ஆகவில்லை.

அதனால், வேறு சில நிறுவனங்களுடன் பேசி வருகிறோம். மசகான் நிறுவனம் கேட்கிற மாதிரியான இடத்தையும் பார்த்து வருகிறது. இரண்டும் கைகூடினால், தமிழ்நாட்டில் மசகான் நிறுவனம் கப்பல் கட்டும் தளம் அமைப்பதில் பிரச்னை ஏற்படாது”. என்கிறார்கள்.

இதனிடையே தமிழக தொழில்த்துறை அமைச்சர் கீர்த்தனா, இன்று தன் தென் கொரியா பயணத்தில் ஹுண்டாய் நிறுவன முக்கிய நிர்வாகிகளை சந்தித்து பேசி இருக்கிறார் என்பதும் கவனிக்கத்தக்கது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தான்; ஆனால், `அமைச்சர்' பதவிகளில் ஏகப்பட்ட பிரச்னை!

சில மாதங்களாக, கர்நாடகா முதலமைச்சர் பதவிக்கு குழப்பம் நீடித்து வந்தது. அது...

'அது நான் இல்லை, போதைப்பொருள் கடத்தலுக்கும், எனக்கும்.!'- லீமா ரோஸ் சகோதரர் ஜான் பிரிட்டோ

போதைப் பொருள் கடத்தலுக்கும், எனக்கும் தொடர்பில்லை என அதிமுக எம்எல்ஏ...

கிள்ளியூர்: காங்கிரஸ் அமைச்சர் தொகுதியில் மறு தேர்தல் நடத்த தவெக வேட்பாளர் மனு; கூட்டணியில் குழப்பம்

நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 6...

நெல்லை: 'விஜய் படத்தின் கீழ் அமர மாட்டேன்!' – இருக்கையை இடமாற்றிய மேயர்

அரசு அலுவலகங்களில் தமிழக முதலமைச்சர் புகைப்படம் வைக்க வேண்டும் என்ற்...