13
September, 2025

A News 365Times Venture

13
Saturday
September, 2025

A News 365Times Venture

Mark Carney: "கனடா ஒருபோதும் அமெரிக்காவின் பகுதியாக இருக்காது" – புதிய பிரதமர் மார்க் கார்னி உறுதி

Date:

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump), கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற நாள் முதல் கனடாவை அமெரிக்காவுடன் இணைக்கத் தீவிரம் காட்டி வருகிறார். இவ்வாறான சூழலில், இந்த ஆண்டு ஜனவரியில் அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பாக, கனடா (Canada) பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக ஜஸ்டின் ட்ருடோ (Justin Trudeau) அறிவித்தார்.

டொனால்ட் ட்ரம்ப் – ஜஸ்டின் ட்ருடோ

மேலும், “கனடா அமெரிக்காவின் ஒரு பகுதியாக மாறுமா…. அதற்கு வாய்ப்பே இல்லை. ட்ரம்பின் அச்சுறுத்தல்களால் கனடா ஒருபோதும் பின்வாங்காது” என்று தெரிவித்த ஜஸ்டின் ட்ருடோ, ஆளும் லிபரல் கட்சியின் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வரையில் பதவியில் தொடர்வேன் என்று கூறினார். இந்த நிலையில், லிபரல் கட்சியின் தலைவராகவும், கனடா பிரதமராகவும் இங்கிலாந்து & கனடா மத்திய வங்கியின் முன்னாள் தலைவர் மார்க் கார்னி (Mark Carney) இன்று தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

இதற்கு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், மார்க் கார்னி 1,31,674 வாக்குகள் எனச் சுமார் 85.9 சதவிகித வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். இவருடன் இந்தப் பதவிக்குப் போட்டியிட்ட கிறிஸ்டியா ஃப்ரீலாண்ட் 11,134 வாக்குகளையும், கரினா கோல்ட் 4,785 வாக்குகளையும், பிராங்க் பெய்லிஸ் 4,038 வாக்குகளையும் பெற்றனர்.

வெற்றிக்குப் பிறகு பேசிய மார்க் கார்னி, “நம்முடைய நாட்டின் நீர், நிலம், வளங்கள் ஆகியவற்றை அமெரிக்கா விரும்புகிறது. ட்ரம்ப் நமது கனேடிய தொழிலாளர்கள், குடும்பங்கள், வணிகங்களைத் தாக்குகிறார். இதில், அவரை வெற்றிபெற அனுமதிக்க முடியாது. இந்தத் தருணத்தில், கனேடியர்களுக்குத் தேவைப்படுவது கனடாவுக்காக நிற்பதுதான்.

மார்க் கார்னி
மார்க் கார்னி

சிறந்த தேசத்தை உருவாக்கப் போராடத் தயாராக இருக்கிறேன். கனடா ஒன்றும் அமெரிக்கா அல்ல. ஒருபோதும் அமெரிக்காவின் ஒரு பகுதியாகக் கனடா இருக்காது. நெருக்கடிகளை எவ்வாறு நிர்வகிப்பது என்று எனக்குத் தெரியும். இதுபோன்ற சூழ்நிலையில், நெருக்கடி மேலாண்மையில் உங்களுக்கு அனுபவமும், பேச்சுவார்த்தை திறனும் தேவை” என்று கூறினார்.

மார்க் கார்னி, 2008 முதல் 2013 வரை கனடா வங்கியின் 8-வது ஆளுநராகவும், 2011 முதல் 2018 வரை நிதி நிலைத்தன்மை வாரியத்தின் தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

உட்கட்சிக்குள் எழும் எதிர்ப்புகள்; "நீங்கள் காங்கிரஸில் தொடர்வீர்களா?" – சசி தரூரின் பதில்

ஆபரேஷன் சிந்தூர் மூலம் பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு மத்திய அரசு பதிலடி...

RCB Event Stampede : 'ரசிகர்களுக்கு வேகம் தேவைதான், அதேபோல..!' – செல்வப்பெருந்தகை

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியின் வெற்றி கொண்டாட்டத்தில் மக்கள் உயிரிழந்த...

Tatkal: இனி தட்கல் டிக்கெட் எளிதாக கிடைக்கும்; IRCTC-ல் ஆதார் இணைப்பு வருகிறது!

ரயில் டிக்கெட் புக்கிங் நடைமுறைகளை கொஞ்சம் கொஞ்சமாக கடுமையாக்கி வருகிறது ரயில்வே...