14
March, 2025

A News 365Times Venture

14
Friday
March, 2025

A News 365Times Venture

Mamata Banerjee: "போலி இந்துத்துவம்; இந்து கார்டை பயன்படுத்தாதீர்கள்"- பாஜக தலைவருக்கு மம்தா பதிலடி!

Date:

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி, “பாரதிய ஜனதா கட்சி அரசியல் ஆதாயத்துக்காக மக்களின் மத உணர்வுகளைப் பயன்படுத்தி, புண்படுத்துகிறது” என வெளிப்படையாகப் பேசியுள்ளார். 

மேற்கு வங்க அரசின் இஸ்லாமிய சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரிக்கு பதிலடி கொடுத்த மம்தா, பாஜக அரசின் செயல்களை ‘போலி இந்துத்துவம்’ எனப் பேசியுள்ளார். 

சுவேந்து அதிகாரி

பிடிஐ அறிக்கையின்படி, சுவேந்து அதிகாரி வருகின்ற மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக ஆட்சிக்கு வந்தால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இஸ்லாமிய சட்டமன்ற உறுப்பினர்களை வெளியேற்றுவதாகப் பேசியுள்ளார்.

“உங்களது இறக்குமதி செய்யப்பட்ட இந்து தர்மம் வேதங்களோ அல்லது  ஞானிகளோ கூறியதல்ல. இஸ்லாமிய மக்களின் அடிப்படை உரிமைகளை எப்படி மறுப்பீர்கள்? இது ஒரு ஏமாற்றுத்தனத்தைத் தவிர ஒன்றுமில்லை. நீங்கள் போலியான இந்துத்துவத்தை இறக்குமதி செய்கிறீர்கள்” எனப் பேசியுள்ளார் மம்தா பானர்ஜி. 

பாஜக மக்களின் மத உணர்வுகளை வைத்து மக்களை அரசியல் ரீதியாக மூளைச்சலவை செய்வது குறித்து வருந்திய மம்தா பானர்ஜி, தன்னுடைய இந்து மதம் அவர்களுடையதிலிருந்து வேறுபட்டது எனக் கூறியுள்ளார். 

மம்தா பானர்ஜி

“இந்து கார்ட்டை பயன்படுத்தாதீர்கள்”

“எனக்கு இந்து தர்மத்தைக் காப்பாற்றும் உரிமை இருக்கிறது, ஆனால் உங்களுடைய பதிப்பை அல்ல. தயவுசெய்து இந்து கார்டை பயன்படுத்தாதீர்கள்.” என்றார் அவர். 

சுவேந்து அதிகாரி, இந்து மக்களின் மக்கள் தொகை, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை ஆட்சியிலிருந்து அகற்றும் எனப் பேசியதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, “எப்படி உங்கள் தலைவர் இஸ்லாமியர்கள் வெற்றிபெற்றாலும் அவர்களைச் சட்டமன்றத்திலிருந்து நீக்குவதாகப் பேச முடியும்? 33 விழுக்காடு மக்கள் தொகையை எப்படி அகற்றுவார்கள்?” எனக் கூறியுள்ளார். 

மேலும், “இந்த நாட்டுக்கு அதன் தனிப்பட்ட கொள்கைகள் உள்ளன. நான் அவற்றுக்கு எதிராகப் பேசவில்லை. நாம் இந்த மாநிலத்தில் 23% பழங்குடி சகோதர சகோதரிகளைக் கொண்டுள்ளோம், மற்ற சமூகத்தவர்களும் இஸ்லாமியர்களும் உள்ளனர். நாங்கள் அனைத்து மதங்களையும் பாதுகாக்கவும் அமைதியை நிலைநாட்டவும் உறுதிகொண்டுள்ளோம்” எனப் பேசினார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`₹'-க்கு பதில் `ரூ' : “பிராந்திய பேரினவாதம்'' – திமுகவை தாக்கிய நிர்மலா சீதாராமன்!

தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, தமிழகத்தில் இந்தி...

`தென் மாவட்டங்களில் சாதி ரீதியான கொலைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன’ – திருமாவளவன்

நெல்லை செல்லும் வழியில் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலை...

Immigration and Foreigners Bill: குடியேறிகளுக்குப் புதிய மசோதா கொண்டு வந்த பாஜக அரசு | முழு விவரம்

Immigrants எனப்படும் குடியேறிகள் தொடர்பாக மத்திய அரசு புதிய மசோதாவை நாடாளுமன்றத்தில்...

”இந்தி ஈஸியான மொழி; இந்தி தெரிந்தால் அனைத்து மாநிலங்களையும் தொடர்பு கொள்ளலாம்” – டி.டி.வி.தினகரன்

தஞ்சாவூரில் அ.ம.மு.க நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட...