12
July, 2025

A News 365Times Venture

12
Saturday
July, 2025

A News 365Times Venture

Kumbh Mela: “அளவுக்கு அதிகமான டிக்கெட் விற்பனை ஏன்?" -ரயில்வேக்கு நீதிமன்றம் கேள்வி!

Date:

டெல்லி ரயில்வே நிலையத்தில் கும்பமேளாவுக்காக கூடிய கூட்டத்தால் 18 பேர் மரணித்ததை அடுத்து தொடுக்கப்பட்ட பொதுநல வழக்கில், அதிக முன்பதிவில்லாத டிக்கெட் விற்பனை செய்யப்படுவது, ஒரே பெட்டியில் அதிக நபர்கள் ஏறுவது போன்ற பிரச்னைகளுக்கு ரயில்வே நிர்வாகம் தீர்வுகாண வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

நீதிமன்ற உத்தரவில், “மனுவில் எழுப்பப்பட்ட பிரச்னைகள், சொலிசிட்டர் ஜெனரல் பரிந்துரைத்தபடி, ரயில்வே வாரியத்தின் உயர் மட்டத்தில் ஆராயப்படட்டு, ரயில்வே வாரியத்தால் எடுக்கப்படக்கூடிய முடிவுகளின் விவரங்களைக் கொடுத்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட வேண்டும் ” எனக் கூறப்பட்டுள்ளது.

delhi high court

மேலும், டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கே உபத்யாயா, நீதிபதி துஷார் ராவ் கெடெலா அடங்கிய அமர்வில் இந்த பொது நல மனு குறிப்பிட்ட சம்வத்தைப் பற்றியது மட்டுமல்ல, ஒரு பெட்டியில் எத்தனை பயணிகளுக்கு டிக்கெட் விற்கலாம், எத்தனை பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகள் விற்கலாம் என்பதற்கு ஏற்கெனவே இருக்கும் சட்டங்களை (ரயில்வே சட்டத்தின் பிரிவுகள் 57 மற்றும் 147) செயல்படுத்தவும் கோருகிறது எனக் கூறப்பட்டது.

அரசு சார்பாக வாதாடிய சொலிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, பயணிகள் நெருக்கடி மிகுந்த அந்த இரவு முன்னெப்போதும் இல்லாத சூழல் என்றும், பொதுநல மனுவில் கூறப்பட்ட விஷயங்கள் உயர்ந்த மட்டத்தில் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் கூறினார்.

நீதிபதிகள், “ஒரு பெட்டியில் எத்தனை பயணிகள் பயணிக்கலாம் என்பதற்கு வரையறைகள் இருந்தால், ஏன் அதைவிட அதிக டிக்கெட்டுகள் விற்பனை செய்கின்றனர்.” எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

“சட்டப்பூர்வமான விதிகள் சரியாக பின்பற்றப்பட்டிருந்தாலே நெருக்கடியை தவிர்த்திருக்க முடியும்” என்றும் தெரிவித்தனர்.

இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மார்ச் 26ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

டெல்லி உயர் நீதிமன்றம்

Kumbh Mela கூட்ட நெரிசல்

உத்தர பிரதேசம் மாநிலத்தின் பிரக்யராஜ் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் கும்பமேளா நிகழ்வில் கலந்துகொள்ள பல ஊர்களில் இருந்து மக்கள் ரயில்களில் செல்கின்றனர். இதனால் டெல்லி ரயில்வே நிலையத்தில் கூட்டம் அதிகரித்து, நெருக்கடியில் 18 பேர் மரணித்துள்ளனர். 15 பேர் காயமடைந்துள்ளனர்.

கும்பமேளாவின் சிறப்பு வாய்ந்த நாள்களில் ரயில்கள் நெருக்கடியில் தத்தளிக்கின்றன. டிக்கெட் இல்லாமல் கூட பயணிகள் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணிக்கின்றனர். உள்ளே நுழைய முடியாதபடி கதவு பூட்டப்பட்டிருந்த ரயில்களில் கதவை உடைக்கும் காட்சிகளையும் காண முடிந்தது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

உட்கட்சிக்குள் எழும் எதிர்ப்புகள்; "நீங்கள் காங்கிரஸில் தொடர்வீர்களா?" – சசி தரூரின் பதில்

ஆபரேஷன் சிந்தூர் மூலம் பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு மத்திய அரசு பதிலடி...

RCB Event Stampede : 'ரசிகர்களுக்கு வேகம் தேவைதான், அதேபோல..!' – செல்வப்பெருந்தகை

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியின் வெற்றி கொண்டாட்டத்தில் மக்கள் உயிரிழந்த...

Tatkal: இனி தட்கல் டிக்கெட் எளிதாக கிடைக்கும்; IRCTC-ல் ஆதார் இணைப்பு வருகிறது!

ரயில் டிக்கெட் புக்கிங் நடைமுறைகளை கொஞ்சம் கொஞ்சமாக கடுமையாக்கி வருகிறது ரயில்வே...