5
September, 2026

A News 365Times Venture

5
Saturday
September, 2026

A News 365Times Venture

KN நேரு வீட்டில் சோதனை: "நேருவைப் பழிவாங்க பார்க்கிறார்கள்; பணிந்து போகாது திமுக" – கனிமொழி

Date:

முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏ-வுமான கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் வீட்டில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகிறது.

இந்தச் சோதனைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார்.

தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் கட்டணப் பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

“சட்டமன்றத்தில் தி.மு.கழகத்தை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல், தொடர்ந்து அவதூறுகளையும் திசைதிருப்பல் நாடகங்களையும் அரங்கேற்றி வந்த தவெக அரசு,

தற்போது காழ்ப்புணர்ச்சியின் உச்சத்திற்கே சென்று, கழக முதன்மைச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான திரு.நேரு அவர்களைப் பழிவாங்கப் பார்க்கிறது.

மிரட்டல்களுக்கும் சோதனைகளுக்கும் பணிந்து போகும் இயக்கம் தி.மு.கழகம் அல்ல. எதிர்க்கட்சியின் குரல்வளையை நெரிப்பதற்காக, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் இந்த ஜனநாயக விரோத தவெக அரசின் நடவடிக்கைகளைப் பார்த்து தி.மு.கழகம் ஒருபோதும் அஞ்சாது”.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'வெடி சத்தம் மட்டுமே; புகையும் இல்லை; தீயும் இல்லை' – ஈரானின் Kharg தீவை மீண்டும் தாக்கிய அமெரிக்கா?

ஈரான் போர் விரைவில் முடிந்துவிடும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சொல்லி...

Trump: "ஹார்முஸ் நீர்ச்சந்திக்குப் பதிலாக சிரியா" – ட்ரம்ப் சொல்லும் ‘புதிய வழி’ என்ன?

ஈரான் போர் தொடங்கிக் கிட்டத்தட்ட 6 மாதங்கள் ஆகிவிட்டன.இந்தப் போரில் அமெரிக்காவிற்கும்,...

’ரூ.2 லட்சத்தில் கமிஷனருக்கு செல்போன் வாங்குவதா?’ – கோவை மாநகராட்சி சர்ச்சை

கோவை மாநகராட்சி பயன்பாட்டிற்கு செல்போன் மற்றும் கேமரா வாங்கியதில் மக்கள் வரிப்பணம்...

"யாராக இருந்தாலும் தப்ப முடியாது" – லஞ்சம் குறித்து அமைச்சர் கீர்த்தனா எச்சரிக்கை

விருதுநகர் வேம்பக்கோட்டையில் மாற்றுத்திறனாளி ஒருவர் பட்டாசுக் கடை வைக்க தடையில்லாச் சான்றிதழுக்கு...